28.04.2025 – வட கிழக்கு
பேரினவாத ஜேவிபி அமைச்சர் சந்திரசேகர் அவர்கள், சமீபத்தில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், ஜட்டிக்கும் ஜெற்றிக்கும் வித்தியாசம் தெரியாது ஜெற்றியின் மேம்பாடு தொடர்பாக பேசும் நிலையிலும் “ஜட்டி”யை நவீனப்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் திரு கனகரத்தினம் சுகாஸ், தேர்தல் பிரச்சார பரப்புரையின் போது கடும் கண்டனம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
“ஜட்டிக்கும் ஜெற்றிக்கும் வித்தியாசம் கூட அறியாத அமைச்சர் ஒருவர் எமது மண்ணை ஆள நினைப்பது , ஜேவிபியின் நிலைப்பாட்டையும், திறமையின்மையையும் வெளிப்படுத்துகிறது.”