29.04.2025 – யாழ்.
இக்கொடியேற்ற நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட நடிகரான ஜெய் ஆகாஷ் கலந்துகொண்டார்.
இதன்போது ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டது.
மேளதாள வாத்தியங்கள் முழங்க, அந்தணர், சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஓத, தேவஸ்தான பிரதம குருவான க.கணபதிராஜா குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் உற்சவ கொடியை ஏற்றிவைத்தனர்.
இந்த கொடியேற்ற நிகழ்வை காண இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகைதந்தனர்.