மே 01 2025 – ஜெய்ப்பூர்
பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சூழலில், ஜெய்ப்பூரில் நடந்து வரும் போட்டியில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் இன்று மோதி வருகின்றன. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் ரோகித் ஷர்மா – ரிக்கெல்டன் ஜோடி சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் சேர்ந்து பவர் பிளேவான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 58 ரன் குவித்தனர்.
29 பந்துகளில் அரைசதம் விளாசிய ரிக்கெல்டன், 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இது நடப்பு சீசனில் அவருக்கு 3வது அரைசதமாகும். மறுமுனையில் அதிரடியாக ஆடி ரோகித் ஷர்மா, 53 ரன்கள் குவித்து அவுட்டானார்.
அதன்பிறகு ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை சேர்த்தது. ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் இருவரும் தலா 23 பந்துகளில் தலா 48 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்