03.05.2025 – கொழும்பு
எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் (வெள்ளிக்கிழமை (02.05.2025) காலை 06.00 மணி முதல் சனிக்கிழமை (03.05.2025) காலை 06.00 மணி வரை) 35 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவற்றில், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 27 முறைப்பாடுகளும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 08 முறைப்பாடுகளும் அடங்குகின்றன.
தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 05 வேட்பாளர்களும் 22 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் மே மாதம் 03 ஆம் திகதி) 524 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் இதுவரை 43 வேட்பாளர்களும் 233 சந்தேக நபர்களும் நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.