03.05.2025 – சிங்கப்பூர்
சிங்கப்பூரில் இன்று (மே 03) பொதுத்தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கியது. ஆளும் கட்சி 32 புதிய முகங்களுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுத்துள்ளது. 30 லட்சம் பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். 2024ம் ஆண்டு தரவுகளின் படி சிங்கப்பூர் மக்கள் தொகையில் இந்தியர்கள் 7.6 சதவீதமும், மலாய் மக்கள் 15.1 சதவீதமும், சீனர்கள் 75.6 சதவீதமும் உள்ளனர்.
97 இடங்களுக்கு நடக்கும் தேர்தலில் அனைத்து மக்களும் ஓட்டளித்து வருகின்றனர். ஓட்டுப்பதிவு முடிந்த உடனே முடிவுகள் அறிவிக்கப்படும். கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆளும் கட்சிக்கு 63 சதவீத பேரும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 15 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்தனர்.
ஆளும் கட்சி மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக லாரன் வோங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி 83 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.