07.05.2025 – புதுடில்லி
தர்மசாலா, லே, ஜம்மு, ஸ்ரீநகர், அமிர்தசரஸ் உள்ளிட்ட வட இந்திய விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது. விமான சேவைகள் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டு வருமாறு பயணிகளுக்கு ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளது.
பயணிகள் தங்கள் பயண நேரத்தை திட்டமிடுவதற்கு முன்பு, விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு விமான சேவைகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.
பின்னர் தங்கள் பயண நேரத்தை திட்டமிடுமாறு விமான நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளது. வட மாநிலங்களில் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
