08.05.2025 – சென்னை
நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:
புதுக்கோட்டை வடகாடு கோவில் திருவிழாவில், ஜாதி மோதலால் பதற்றமான சூழல் எழுந்துள்ளது. இது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
ஜாதியை ஒழித்தோம்; சமூக நீதியை காத்தோம் என தற்பெருமை பேசும் திராவிட கட்சிகளின், 60 ஆண்டுகால ஆட்சியில் நடக்கும் இதுபோன்ற ஜாதி கொடுமைகள், திராவிடம் என்பது போலியானது; பொய்யாக கட்டமைக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது.
வடகாடு கலவரத்திற்கு ஜாதி மோதல் காரணமல்ல; மது போதையில் ஏற்பட்ட முன்விரோதமே காரணம் என, காவல்துறை புதிய விளக்கம் அளித்துள்ளது. அது வெட்கக்கேடானது.
ஜாதி கலவரம் தான், தி.மு.க., அரசின் அவமானமா, மது போதை கலவரம் வெகுமானமா. இத்தனை வன்முறை வெறியாட்டங்களுக்கு காரணமான மதுவை, அரசு ஏன் தடை செய்யவில்லை? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.