09.05.2025 – வாஷிங்டன்
இதுகுறித்து அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் கூறியதாவது:
போர் பதற்றத்தை தவிர்க்கும்படி தான் அமெரிக்காவால் சொல்ல முடியும்.
இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிடப்போவது இல்லை.
அது எங்கள் பணியும் கிடையாது.
இவர்களுக்கு இடையேயான போர், பிராந்திய போராகவோ அல்லது அணு ஆயுத போராகவோ மாறக்கூடாது.
அவ்வாறு நடந்தால், அது பேரழிவை ஏற்படுத்தும்.
இது அந்த நாடுகளின் தலைவர்கள் வசம் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.