09.05.2025 – யாழ்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது;
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழீழப் பிரகடனம் நிறைவேற்றப்பட்ட எமது மண்ணைத் தாம் கைப்பற்றுவோமென சிங்கள பௌத்த பேரினவாதக் கட்சியான JVP சூளுரைத்ததையடுத்து, நான் பிறந்த வட்டுக்கோட்டை மண்ணில் இம்முறை நான் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் நான் சார்ந்த “சைக்கிள்” சின்னத்தை விட JVP ஒரு வாக்கைத் தன்னும் அதிகமாகப் பெற்றால் தேர்தல் அரசியலிலிருந்து ஒதுங்குவேன் என்று பகிரங்கச் சவால் விடுத்திருந்தேன்!
நீங்கள் வழங்கிய பேராதரவு காரணமாகச் சவாலில் வெற்றி பெற்றது மட்டுமன்றி, எனது கட்சி 3 வட்டாரங்களில் நேரடியாக வெற்றி பெற்றதோடு மேலதிகமாக 3 விகிதாசார உறுப்புரிமைகளைப் பெற்று மொத்தமாக 6 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. அத்தோடு JVP (NPP) சகல 15 வட்டாரங்களிலும் தோற்கடிக்கப்பட்டது.
சவாலில் என்னைத் தோற்கவிடாது அரசியல் அங்கீகாரம் தந்த உங்களுக்கு ஆயுள்வரை நன்றிக்கடன் பட்டவனாவேன்! கோடி நன்றிகள் வட்டுக்கோட்டைச் சொந்தங்களே!
இவை வெறும் வார்த்தைகள் அல்ல. என் அடிமனத்திலிருந்து எழும் சத்தியத்தின் தரிசனம்.
என் உயிருள்ளவரை மண்ணுக்கும் மாவீரர்களுக்கும் உங்களுக்கும் விசுவாசமாய் இருப்பேன் என்று இத்தால் சத்தியம் செய்கின்றேன்!
“வலிமேற்குப் பிரதேச சபை” சைக்கிள் : 4982 | JVP : 3407