11.05.2025 – நல்லூர்.
தமிழின அழிப்பு வாரம் மே18 முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நல்லூர் தியாக தீபம் நினைவிடம் முன்பாக ஆரம்பம்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தமிழீழத் தாயகத்தில் நினைவுகூரப்பட்டு வருகிறது.
அந்த வகையில், முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக இன்றைய தினம் (11.05.2025) வட தமிழீழம் யாழ்ப்பாணம் , நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடம் முன்பாக நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டு கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.