13.05.2025 – களுத்துறை,
நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “தெமட்டகொடை சமிந்த” என்பவரின் மூன்று சகாக்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் களுத்துறை, மொரகஹஹேன கோனபொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் மூவரும் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
38, 45 மற்றும் 46 வயதுடைய மூன்று நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 02 கிலோ ஹெரொயினும் 4500 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு நான்கு கோடி ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.