13.05.2025 – வடமராட்சி கிழக்கு.
இது குறித்து மக்கள் தெரிவிப்பதாவது;
கடந்த காலங்களில் மணல் திட்டிய பகுதிகளில் இருந்தே மணல் எடுத்துச் செல்லப்பட்ட போதும், தற்போது கிராமப் பகுதிகளில் கட்டிட வேலைகள் அதிகரித்திருப்பதால், அனுமதி வழங்கப்படாத இடங்களிலும் மக்கள் குடியிருப்புகளின் நடுவே மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.
இந்த நிலைமை தொடருமானால், இயற்கை சமநிலைக்கு பாதிப்பு ஏற்பட்டு, மழைக்காலங்களில் பெரும் நீர்த்தேக்கம் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.