16.05.2025 – நியுஜேர்சியி.
சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
நியுஜேர்சியிலும் அமெரிக்கா முழுவதிலும் வாழும் தமிழ் அமெரிக்கர்களுடன் இணைந்து இலங்கையின் இனமோதலின் போது கொல்லப்பட்ட அல்லது பலவந்தமாக காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நினைவுகளை நான் கௌரவிக்கின்றேன்.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்விற்காக நாங்கள் தொடர்ந்தும் பரப்புரை செய்கின்றோம்.