18.05.2025 – கொழும்பு.
75 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கை விமானப் பயணி ஒருவரை சனிக்கிழமை (17) விமானநிலைய சுங்கஅதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர், கண்டி கம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவர் ஆவார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் பயணப்பொதியில் இருந்து,”பிளாட்டினம் டபிள் மிக்ஸ்” வகையைச் சேர்ந்த 50,000 சிகரெட்டுகள் அடங்கிய 250 கார்டூன்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சிகரெட்டுகளை துபாயிலிருந்து விமானத்தில் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.