கோவை கொடிசியா மைதானத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது மே 18 கூட்டம்.

ஒருவனின் இறப்பை விட கொடியது, இறப்பின் வலிகளை சுமந்து நிற்பது என்பதை 16 வருடமாக அனுபவித்து வருகின்ற ஒரு பெருங்கூட்டம் வழக்கம் போலவே அழுது நின்றது.
எமக்காகவும் பேசுங்களே என்ற பதிவின் காட்சிகளை கட்டு 50000 இக்கும் மேற்ப்பட்ட கண்களும் அழுது கொண்டுதான் இருந்தது. தனிப்பட்ட நமது உடன் பிறந்தார்கள், பெற்றவர்கள் சாவு கூட ஓரிரு வருடங்களில் அதன் தாக்கத்தை குறைத்துக் கொள்ளும் நமது மன உளவியலில். ஆனால் 16 வருடத்திற்கும் மேலாக எம்மவரின் இறப்பு நம்மை உறங்கவிடாமல் துரத்துகிறது என்றால் நாம் அந்த இறப்பிற்கு நியாயம் கோர பிறந்தவர்கள் என்பதற்காகவே.
அண்ணன் சீமானின் இன்றைய பேச்சு, இந்த இனத்தை தனது உயிரை விட மேலாக நேசிக்கும் ஒருவரின் பேச்சு.
இனவிடுதலைக்கு உரிய பெருவெளியை அடைய எல்லா கதவுகளையும் இவ்வுலகு அடைந்தாலும், அண்ணன் சீமானின் பேச்சும், அதில் இருக்கும் உண்மையும் நமக்கான விடுதலையை பெற்றுத்தரும் என உறுதியாக இன்றைய கூட்டம் நமக்கு உணர்த்தியது.
அண்ணன் சீமானின் இன்றைய உரை ஒரே நேரத்தில் அழுகையையும், விடுதலைக்கு உழைக்க வேண்டிய வெறியினையும் நமக்கு உணர்த்தி நின்றது.
தமிழரின் தாகம் ! தமிழீழ தாயகம் !
செந்தில்நாதன்.
கோவை கொடிசியா மைதானத்தில் இருந்து,
18.05.2025

