19.05.2025 – லண்டன்.
தமிழின அழிப்பு நினைவு நாளை முன்னிட்டு, மே 18 அன்று நிகழ்ந்த பேரவலங்களை ஒளிவடிவில் பிரதிபலித்துகொண்டு பிரச்சார ஊர்தியானது நேற்று (18.05.2025) லண்டன் மாநகரில் ஊர்வலமாக சென்றது.

சிங்கள பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்டும், தொடர்ந்து நடைபெற்று வரும் தமிழின அழிப்பின் பேரவலங்களை ஒளித்திரையில் காட்சிப்படுத்தும் வீடியோவுடன், ஒரு சிறப்பு ஊர்தியானது நேற்று அல்பேர்டன் (Alperton) பகுதியில் இருந்து லண்டனின் பாராளுமன்ற சதுக்கம் (Parliament Square) நோக்கி ஊர்வலமாகச் சென்றது.
இந்த வாகன ஊர்தி ஆங்கிலம், இந்தி, சயினீஸ் மற்றும் அரபு மொழிகளில் தகவல்களை தாங்கி, உலகின் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் நகரம் முழுவதும் பயணித்தது.