24.05.2025 – ஹம்பர்க்.
ஹம்பர்க் ரயில் நிலையத்தில் 13 மற்றும் 14வது நடைமேடையில் பயணிகள் எப்போதும் போல் ரயிலின் வருகைக்காக காத்திருந்தனர். அப்போது, அங்கே நின்றிருந்த பெண் ஒருவர் திடீரென தாம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அருகில் உள்ளவர்களை சரமாரியாக குத்த ஆரம்பித்தார்.
இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத பலரும் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்தனர். தாக்குதலில் 18 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சம்பவத்தை அடுத்து அங்குள்ள போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர். அவர் எதற்காக இதுபோன்ற தாக்குதலில் இறங்கினார் என்பது தெரியவில்லை.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், தாக்குலில் ஈடுபட்டவர் 39 வயது பெண். அவர் எதற்காக இப்படி நடந்து கொண்டார் என்பது தெரியவில்லை. தாக்குதலுக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது பற்றிய விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு மனநிலை பாதிப்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்க உள்ளோம் என்றனர்.