26.05.2025 – பிரிட்டன்.

TRO மாபெரும் தமிழர் விளையாட்டு விழா 2025 பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விளையாட்டுத் துறையின் ஏற்பாட்டில் நேற்று (25.05.2025) Rounsdhaw playing மைதானத்தில் நடைபெற்றது.
பொதுச்சுடரினை நெதர்லாந்து நாட்டின் செயற்பாட்டாளர் ஶ்ரீ ரஞ்சனி அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.
பிரித்தானிய தேசியக்கொடியினை பிரித்தானிய இளையோர் அமைப்பின் துணை பொறுப்பாளர் கலை அரசி அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.
தமிழீழ தேசியக்கொடியினை பிரதம விருந்தினரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நெதர்லாந்து நாட்டின் பொறுப்பாளர் திரு ஜெயா அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.
ஈகைச் சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நெதர்லாந்து கிளை மகளிர் ஒருங்கமைப்பாளர் சாந்தினி அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
















