26.05.2025 – ஜெய்ப்பூர்.
பிரீமியர் லீக் தொடரின் 69வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சவாய் மான் சிங் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதின.
முதலில் டாஸ்வென்ற பஞ்சாப் அணி, பீல்டிங் தேர்வு செய்தது. மும்பை அணியின் துவக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.பவர் ப்ளே முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது.
ரோஹித் சர்மா 21 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 26 ரன்கள் அடுத்து விக்கெட் இழந்தார்.
சூர்யகுமார் யாதவ் 34 பந்துகளில் அரை சதம் அடித்தார். இறுதியில் மும்பை அணி, இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு184 ரன்களை எடுத்தது. பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங், மார்கோ ஜேன்சன் மற்றும் விஜயகுமார் வைஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 185 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணியில் பிரபு சிம்ரன்சிங் முதல் விக்கெட்டாக 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசிய பிரியான்ஸ் ஆர்யா, 62 ரன்களிலும் ஜோஸ் விங்கிலிஸ் 73 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். இறுதியில் பஞ்சாப் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் அணி, ‛குவாலிபையர் 1’ல் விளையாட தகுதி பெற்றுள்ளது. மும்பை அணி 4வது இடம் பிடித்துள்ளது.