30.05.2025 – தமிழீழம்.
வழமைபோல் அகலவான் மீதிலிருந்து கதிரவன் பூமியில் ஆட்சியை ஆரம்பிக்கிறான். வீசும் தென்றல் காற்றும் வெடிகளாலும், குண்டுகளாலும் அனலாக வீசியது. அதுவும், வழமை போலவே பட்சிகள் கூடுகளையும், குஞ்சுகளையும் விட்டுத் திணறி ஓடின. எமது மண்ணில் வாழ்ந்தமையால் சுதந்திரமும் நிம்மதியும் அவைகளுக்கும் இல்லை. ஆனால் வழமைக்கு மாறாக இன்னொன்று நண்பன் நித்தியுடன் நான் சந்தித்துப் பேசிய இறுதி வார்த்தைகளை நினைவுட் புகுத்துகிறது.

இறுதியாக 29. 05.1992 அன்று மாலை ஆவரங்காலில் நடைபெற்ற வீரவணக்கக் கூட்டத்தில் இருவரும் சந்தித்தோம், பல விடயங்களைப் பற்றிக் கலந்துரையாடினோம். உனது புதிய பெயர் புகழேந்தி எனக் கூறினாய். நீ நாளை அடிபாட்டுக்குப் போவதாகக் கூறிவிட்டு “இந்த அடிபாட்டில் நான் மண்டையைப் போட்டா என்னைப் பற்றி நீ எழுது” என்று வாய்ப் பேச்சாய் சொன்னாய் அது நிஜமாகிவிட்டதடா!
தெல்லிப்பழையில் எதிரியின் கால் பதிந்துள்ளதா நிலைமை எவ்வாறு இருக்கின்றது என அறிவதற்காகத் தொலைத்தொடர்பு அறைக்குச் செல்கிறேன். அங்கு வானலையில் மிதந்து வந்த சோகக் காற்று நித்தியின் நிரந்தரப் பிரிவைத் தெரிவித்து விட்டுத் தன்வழியே பயணம் தொடர்ந்தது..
“சோகக் காற்றே ஒருகணம் நில் நித்தி சென்ற பாதையைச் சொல் அவன் வீரவரலாற்றை ஒருமுறை பகிர்ந்துவிடு”
நித்தி கட்டையான உருண்டையான, இறுக்கமான உடலமைப்பைக் கொண்ட இளம்புலி. இவன் முகத்தை வர்ணிப்பதைவிட இதயநாதத்தில் இசைந்து இருக்கும் பாட்டுவரி பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்.
‘’பால்மணம் மாறாத பிஞ்சுகள் பிரபாகரன் வளர்க்கின்ற குஞ்சுகள்”
இளமை பொழியும் உடலமைப்பும் எதையும் இலகுவில் புரிந்து கொள்ளும் மதி நுட்பமும் கொண்டவன். கல்வி கற்கும் காலத்தில், விளையாட்டுத் துறையில் இவ னது முத்திரை ஆழமாகப் பதிந்தமையால் பாடசாலையில் சகலருக்கும் இவன் அறிமுகமாகி இருந்தான்.
குடும்ப நிலைமையால் இவனது கல்வி தொடர வாய்ப்பின்றிப் போனது. சிறுவயதிலேயே தந் தையை இழந்த இவன் கல்வியை நிறுத்தி வியாபாரத்தில் இறங்கினான். இவ்வேளையில் 1990இல் மீண்டும் ஈழயுத்தம் ஆரம்பமானது.,எங்கும் செல் குண்டுமழை, எத்திசையிலும் அவல ஓலம், இடம்பெயர்வு விடுதலைவேண்டி இளம் வேங்கைகள் நித்தமும் களப்பலியாகினர்.
தாயக விடுதலையே தமிழரின் விடிவு என உணர்ந்து கொண்ட “சம்புநாதன்” நித்தியாகத்தன்னை மாற்றி போரிலே புதுயுகம் படைக்கும் புலிகளின் கடின உழைப்பில் பங்குகொண்டான். கோட்டையில் பதுங்கு குழி அமைத்தல், பண்ணை பாலத்துப் பக்கம் ரயர்ப்பொயின்ற் அமைத்தல், இரவோடுஇரவாக அமைக்கும் காவலரண்கள். காலைபொழியும் குண்டுமழையால் சிதைவுறும். ஆனாலும் அவை மறுநாள் இரவு இவனதும் இவனது தோழர்களினதும் பங்களிப்பால் புத்துயிர் பெற்றுப் புதுப் பொலிவுடன் காணப்படும். நித்தமும் குண்டு மழை இந்நிலை கோட்டையில் கொடி ஏறும்வரை நீடித்தது. ஈடுபடும் மோட்டார்
இவ்வேலையில் வேளையில் எதிரியின் குண்டு இவன் கைச் சதைக்குட்குடி புகுந்தது. எடுப்பதற்கு வசதியில்லை. சில நாட்களின் பின் காயம் மாற மீண்டும் கோட்டைக் காவலரண்களில் அணியுடன் இணைந்து இவனது செயற்பாடு எதிரியின் நடமாட்டத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. இறுதியில் 26.09.1- 990 அன்று கோட்டையில் கொடி பறந்தது.
முதன் முதலில் இவனை நான் பயிற்சி முகாமில் சந்தித்தேன். மிகவும் கலகலப்பாக சக தோழர்களுடன் பழகும் இயல்பினன். பயிற்சிக்காக அணிபிரிக்கும் போது இவனது அணியில் நானும் ஒருவனானேன். பயிற்சியின் போது இவன் ஓட்டத்தில் தன் திறமையைக் காட்டினான். ஓய்வு நேரங்களில் யாழ். கோட்டையின் நிகழ்வுகளை மற்றைய போராளிகளுடன் சுவைபடப் பகிர்ந்து கொள்வான். பயிற்சி யின்போது ஒரு நாள் “களத்தில் காத்தான்” சிந்து நடைக் கூத்து நடந்தது. இவன் அதை மிகவும் உன்னிப்பாகப் பார்த்து விட்டு மறுநாள் மாலை பயிற்சி முடிந்து ஓய்வாக இருந்த போது சக குழுத் தோழர்கள் புடை சூழ மிகவும் அபிநயமாக தமிழ்மாறன் பாட, ஆடிக் காட்டினான். இக் கூத்தைப் பயிற்சி முடியும் நாள் வரை வசனங்களை மாற்றி மாற்றி ஓய்வாக இருக்கும் போது பாடி ஆடி மகிழ்விப்பான். இன்று அந்த பாடல்களைக் கேட்கும் போது நித்தியின் உருவமும் ஆட்டமும் தான் என் மனத்திரையில் நிழலாகும்.
ஒருநாள் காலை அனுமதி இன்றி மரத்தில் ஏறி இளநீர் பிடுங்கிவிட்டான். இதனைக் கண்ட பயிற்சி ஆசிரியர் இவனையும் இவனுடன் கூடச் சென்ற இளங்குமரன் குழுவிற்குப் பொறுப்பாக இருந்த என்னையும் அழைத்து ஒவ்வொருவர் கையிலும் ஒவ்வொரு இளநீர், தேங்காய் தரப்பட்டு அன்றைய பயிற்சியை எடுக்கும்படி விடப்பட்டோம், இதற்காக நாம் வெட்கப் பட்டோம். இவனோ மாறாக எதுவும் நடவாதது போல பகிடி விட்டுக் கொண்டு திரிந்தான். ஆனால் தனது தவறை மனதார உணர்ந்து பின் கவலைப்படு வான். இவ்வாறான குறும்புத் தனங்களுக்குத் தனிப்பட்டியலே இவனுக் குண்டு
பயிற்சி நிறைவு நாள் அன்று பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தோம். அதுதான் நாம் இறுதியாக ஒன்றாக மகிழ்ந்தநாள். ஒருமுறை நாளின் சுவையான அந்த செயலை வர்ணிக்க நித்தி இல்லையே.
மறுநாள் பூரண ஓய்வு. மாலை சகலரும் ஒன்று கூடினோம். நாளை தைப்பொங்கல் அன்று விளையாட்டுப் போட்டி வைப்பது பற்றி பயிற்சி ஆசிரியரின் குரல் மட்டும் ஒலித்தது. அதனைத் தொடர்ந்து சகலரும் சம்மதம் தெரிவித்தார்கள். இவ் விளையாட்டுப் போட்டியில் மரதன் ஓட்டத்தில் முதலாவது பெயர் நித்தி. அவனுடன் ஐவர் ஓடினார்கள். அதில் தன் முத்திரையைப் பதித்தான். அதே போல் சில்லாலையில் அவனது பெயரைக் கேட்டால் மரதன் ஓட்டக்காரன் என்று கூறும் அளவுக்கு ஊரிலும் சாதனை நிலை நாட்டியுள்ளான்.
பயிற்சி முடிந்ததும் “பிரிவு” என்ற கொடிய நிகழ்வு எமக்கு புதிய ஒன்றல்ல. அதனைக் கண்டு அஞ்சி ஓடுபவரும் நாமல்ல. சில பிரிவுகள் குறுகியவை. சில நிரந்தரமானவை. இதனால் நாம் எமது இலட்சியத்தை வீச்சாக்கி விடுதலையை வென்றெடுக்கும் பாதையில் எமது துப்பாக்கி கனல்கக்கும் இலட்சியம் ஈடேறும். நாளைய எமது சுதந்திர விடியலில் எல்லோரும் சங்கமிப்போம்.
நீண்ட இடைவேளைக்குப் பின்னர் 17. 03. 1991 அன்று நித்தியைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. சிலாவத்துறைக்குச் செல்லும் புலிவீரர்களுள் மிடுக்காக, ஆயுத பாணியாக மனச் சந்தோசத்துடன் செல்வது தெளிவாகத் தெரிந்தது. அவன் அருகில் சென்று மனத்திரையிலுள்ள சந்தோசமான பல விடயங்களை இருவரும் பகிர்ந்து கொண் டோம். விடைபெறும் வேளையில் மனச்சஞ்சலம் மீண்டும் கதைக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது தான்.
சிலாவத்துறையில் இருந்து வந்ததும் 01.04.1991 அன்று காரைநகர் தாக்குதலுக்கான முன்னேற் பாடுகளைச் செய்வதற்காகச் சென்ற குழுக்களில் நித்தியும் ஒருவன். காரைநகர் தாக்குதலில் முன்னேறிய படையுடனான தாக்குதலை மிகத்திறம்படச் செய்தான்.
அங்கு நிற்கும் போது போது “அண்ணை கோட்டையில் பட்ட காயத்தினால் கை சரியான வேதனையாக இருக்கு, கையினுள் இருக்கும் ரவுண்சை எடுத்தா சுகமாய் இருக்கும். என்றாலும் இந்த அடிபாட்டை முடித்துவிட்டுச் செய்வம்” என்றான். அத் தாக்குதல் முடிந்த பின்னர் கையில் இருந்த ரவுண்சு எடுக்கப்பட்டதும் வைத்தியர் அவனைப் பார்த்து மூன்று மாதக் கட்டாய ஓய்வு எடுக்கும்படி கூறினார் அவ்வார்த்தை செவிடன் காதில் ஊதிய சங்காகப் பயனற்றுப் போனது. காரணம் “ஓய்வு” என்ற பதத்தை புலிவீரர்களால் ஜீரணிக்க முடியாது. அதற்கு நித்தி விதிவிலக்கில்லை.
18.04.1991 அன்று மன்னார் பரப்புக்கடந்தானில் பெரியளவில் ஓர் இராணுவ நடவடிக்கை இடம் பெற்றது. இந்நடவடிக்கையை முறியடிப்பதற்காக யாழ். மாவட் டத்திலிருந்து சென்ற படையணியில் நித்தியும் அடங்கியிருந்தான். இவனுடன் நான் பண்டி விரிச்சானில் வைத்துக் கதைத்த போது சிலாவத்துறை அனுபவங்களைக் கூறினான். பரப்புக் கடந்தானிலிருந்து எதிரி புறங்காட்ட, இவனது பங்களிப்புச் சிறந்த முறையில் இருந்தது. 10.07.1991 அன்று பெரியளவில் ஆனையிறவுப் படைத்தளம் தாக் குதலில் இவன் ‘பசிலன்’ அணியில் இருந்தான். எதிரியின் அவதானித்துத் முகாம்
நிலைகளை தாக்கினான். இதனால் பெரும் சேதமடைந்தது. பசிலன் அணியின் தேவை குறைய இவன் மருத்துவப்பிரிவுக்கு அனுப்பப்பட்டான். மருத்துவப் பிரிவு என்பது இலகுவானது அல்ல. ஒரு புலிவீரனை உருவாக்குவதைவிட புலி வீரனைக் காப்பாற்றுவது புனிதபணி.
இவன் ஒரு பகுதிக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தான். அவ்வேளையில் நான் காயப்பட் டுச் சிகிச்சைக்காகச் சென்றிருந்தேன். காயத்தின் வேதனையை இவனது சந்திப்பு நீக்கியது. இவனது பராமரிப்பைப் பார்த்த வைத்தியர்கள் பாராட்டிச் செல்வதோடு அவன் மேலும் வளர்ச்சியடைய ஆவன செய்தார்கள்.
மருத்துவப் பிரிவில் நின்ற இவனுக்கு இவ்விடம் உகந்ததாக இருக்கவில்லை. தளபதியிடம் யுத்தமுனைக்குச் செல்லும் அனுமதியைப் பெற்றான். இவனைத்தளபதி நன்கு அறிந்திருந்தமையால் கனரக ஆயுதங்களைக் கையாளும் பயிற்சிக்காக அனுப்பப்பட்டான். பயிற்சி முடி வில் ஜீ. பி. எம். ஜீ. உடன் களம் புகுந்தான்.
ஆனையிறவு முகாம் தக்க வைத்த முயற்சி முடியும் தறுவாயில் வடக்கு கிழக்குப் பாலமாக அமையும் மணலாற்று கைப்பற்றும் நோக்குடன் “மின்னல்” என்ற பெயரிட்டு பெரும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர். எமது போராளிகள் எதிர்த்தாக்குதல்களை
நடாத்தினார்கள். அதில் பங்குபற்றுவதற்காகச் சென்ற படையணியில் நித்தியும் ஒருவன். உணவு, நீர் பெரும் பிரச்சினையாக இருந்தும் இவன் மற்றைய போராளிகளுடன் சேர்ந்து எதிரியின் ஆக்கிரமிப்பைத் துப்பாக்கி முனையில் சந்தித்தான். எதிரியின் “இராட் சதப்பறவைகள்” குண்டு மழை பொழிந்தன.
எறிகணைகள் கூவின, காடு தீப்பற்றி எரிந்தது. எதிரிகள் கவசவாகனங்களின் உதவியுடன் முன்னேறிக் கொண்டிருந்த போது எமது படையணியின் அதிரடித்தாக்குதலினால் நிலை குலைந்து பின்வாங்கிச் சென்றனர். இத்தாக்குதலில் நித்தியின் பங்கு வியக்கத்தக்க வகையில் இருந்தது.
பலாலி முகாமைச்சுற்றியுள்ள மினி முகாம்கள், காவலரண்களை அழிக்கும் போது முழங் கும் ஜீ.பி.எம். ஜீ. இவனுடைய தாகத்தான் இருக்கும். பல எதிரிகளை அழித்துத் தன் திறமையைத் தொடர்ந்து காட்டினான்.
தெல்லிப்பழையில் எமது பகுதியை நோக்கிச் சரமாரியாகக் குண்டுமழை, செல்கள் குடிம் னைகளை நோக்கி ஏவப்பட்டன. அன்று காலை விடிந்தது. ரவைகள் எமது காவலரண்களை நோக்கிப் பாயப் போர் மூண்டது. எதிரி எம்மண்ணில் குண்டுபட்டு மண்டியிட பெரும் படை, கனரக வாகனத்தின் உதவியுடன் எம்படை
முன்னேறியது. மனோபலத்துடன் எதிர் கொண்டது, அதில் நித்தியும் ஒருவன். இவன் துப்பாக்கி எதிரியின் வரவைத் தடுத்து நிறுத்துவதில் பெரும் பங்கு வகித்துக் கொண்டிருந்தது.
இவ் வேளையில் எமது போராளி ஒருவன் குண்டுபட்டு முனகும் சத்தம் கேட்கிறது. நித்தி தனது ஆயுதத்தைப் பாதுகாப்பாக அனுப்பி விட்டு அத்திசையை நோக்கி ஓடுகிறான். சகபோராளிகள் தடுக்க சகோதர பாசம் முன்னே அழைத்துச் செல்கிறது. ஒருவனைத்தூக்க அவன் என்னை விடு, அவனைத் தூக்கிச்செல் என்று காட்ட அவன் காட்டிய திசையை நோக்கி ஊர்ந்து செல்கிறான். அவ்விடம் எதிரியின் எல்லை. ஒருவாறாகச் சென்று தூக்கிவரும் போது என்னை விடு எனக் கூறியவன் நிரந்தர விடைபெற்றிருந்தான். இருவரையும் தூக்கி எம்பக்கம் வரும் வேளையில் எதிரி இனம் கண்டுகொண்டான்.
சரமாரியாக அத்திசையை நோக்கி ரவை பாய்கிறது. நித்தி நிலை எடுத்து இருந்து விட்டு ரவையின் ஓய்வின் பின் மீண்டும் தூக்கி வர முயலும்போது ரவை நித்தியின் உடலைப் பதம் பார்த்தது. எந்த மண்ணை நேசித்தானோ அந்தத் தாயக பூமி அவனை நிரந் தரமாக ஏற்றுக்கொண்டது. நீண்டவரிசையில் அடுக்கிய பேழையில் உன்புகழ் உடல் நிம்மதியாக நிரந்தரமாகத் தூங்கிக் கொண்டிருந்தது. வழமையாகத் தூங்கும்போது சொல்லும் வார்த்தையை மட்டும் இன்று நீ சொல்லவில்லை.
பயிற்சி முடிந்து இரவு தூங்கப் போகும் போது நித்தியின் குரல் ஒலிக்கும். நான் நித்திரையானால் எழுப்புவது கஸ்டம். அலட் அடிச்சா சுருட்டிப்பிரட்டி எழுப்பிப் போடுங்கோ “ ஆனால் இன்று மாவீரர் வரிசையில் துயில் கொள்ளும் உன்னை நமது வெற்றி தட்டியெழுப்பும்.