01.06.2025 – யாழ்.
1981 ஆம் ஆண்டு யாழ் பொது நூலகத்தின் எரிப்பு.
நூலகம் எரிந்த ஒரு நிகழ்வு மட்டுமல்ல; அது ஒரு மக்கள் சமூகத்தின் நினைவும் நம்பிக்கையும் அறிவும் எரிக்கப்பட்ட தருணமாகும்.
அந்தச் சிதைவிற்கெதிராக, நூலக நிறுவனம் தனது செயற்பாடுகளை ஆவணங்களின் மீட்பு பயணமாக அமைத்துள்ளது.
நூலகத்தின் ஒவ்வொரு ஆவணப்படுத்தலும், ஒவ்வொரு எண்ணிம முயற்சியும், அந்த எரிப்பின் இருளுக்கெதிரான ஒளிக்கற்றையாகவே விளங்குகிறது.
எரிக்கப்பட்ட ஒவ்வொரு பக்கத்திற்கும் பதிலாக, இன்று “6,099,038” பக்கங்களை கொண்ட “173,025” ஆவணங்களை உலகிற்கு திறந்த அணுக்கத்தில் வழங்கியுள்ளது.
எரிக்கப்பட முடியாத இணைய நூலகத்தைக் கட்டி எழுப்புவோம்!
மேலதிக தகவல்களுக்கு : www.noolaham.foundation