04.06.2025 – கட்டுநாயக்க.
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் 366 கிராம் குஷ் போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் செவ்வாய்க்கிழமை (03.06.2025) கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஆணொருவரும் அங்கொடை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடை பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட ஆண் போதைப்பொருள் கடத்துவதற்கு குறித்த பெண்ணுக்கு உதவி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.