சாவகச்சேரி, தமிழீழம்.
சாவகச்சேரியில் கருங்கற்களுக்குள் தேக்கு மர குற்றிகளை மறைத்து ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி சனிக்கிழமை (07.06.2025) கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மர குற்றிகளை கொண்டு சென்ற போது சாவகச்சேரி பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட தேக்கு மர குற்றிகள் 15 இலட்சம் ரூபா பெறுமதியுடையது என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.