சேலம், தமிழ்நாடு.
சென்னையில் இருந்து கர்நாடகா நோக்கி 7 பேருடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. வாழப்பாடி அருகே புதுப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, அங்குள்ள பாலத்தின் இடதுபுற தடுப்பில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 7 பேரில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.