யாழ்ப்பாணம், இணுவில் – காரைக்கால் பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள் கொட்டப்படும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று திங்கட்கிழமை (09.06.2025) நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அப்பகுதியில் ஆலயங்கள் உள்ளதோடு, மக்களின் குடிமனைகள் அதிகரித்து, சன நெரிசல் மிக்க பகுதியாக உள்ள நிலையில், குப்பைகளும் கழிவுகளும் அதிகமாக காணப்படுகிறது.
அப்பகுதியில் நல்லூர் பிரதேச சபையால் கழிவகற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்ற நிலையிலும் எத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததால் பிரதேசவாசிகள் அசௌகரியங்களையும் சிக்கல்களையும் சந்தித்தவண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.