அநுராதபுரம் –
அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (11.06.2025) உத்தரவிட்டுள்ளது.
அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன, நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அத்துல திலகரத்ன என்பவரை ஜனாதிபதி பொது மன்னிப்பை பயன்படுத்தி சட்டவிரோதமாக விடுதலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த 08 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.