யேர்மனி.
இனப்படுகொலையின் இரத்தகரைபடிந்த சிறிலங்காவின் ஜனாதிபதி அனுரா எதிராக யேர்மனியில் தமிழ் மக்கள் பெருமளவில் திரண்டனர்.
அனுராவுக்கு வழங்கப்பட்ட சிவப்புக் கம்பள வரவேற்பை நேரடியாக எதிர்க்கும் அனுமதி வழங்கப்படாததால், போராட்டக் குழு அதற்கேற்ப தங்கள் எதிர்ப்புப் பாணியை மாற்றி அமைத்தது. “இனப்படுகொலையைக் கண்டிக்கும் கண்காட்சி” என்ற பெயரில் சட்டரீதியான அனுமதியுடன் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த கண்காட்சியில்:
- சிறிலங்கா இராணுவத்தினரால் நடத்திய ,இனப்படுகொலை சாட்சிப் புகைப்படங்கள், தகவல்களுடன் வழங்கப்பட்டன.
- வரவேற்பு நிகழ்வுக்கு வந்தோருக்கு நேரில் சென்று எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
- யேர்மன் மொழியில் தயாரிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் மூலம் சிறிலங்காவின் இராணுவ பயங்கரவாதம் பற்றி விளக்கப்பட்டது.
இளைய சமூகத்தின் நேர்த்தியான செயல்பாடு, சம்பந்தப்பட்டவர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த முறையான அமைதியான ஆனால் தாக்கமிக்க எதிர்ப்பு, சிறிலங்கா அரசாங்கம் எண்ணிப் பார்க்க முடியாத அளவு எதிர்ப்பை தமிழ மக்கள் காட்டி நின்றனர் ..

