சென்னை:
அறிக்கை:

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து 242 பயணிகளுடன் இங்கிலாந்து தலைநகர் இலண்டன் செல்லவிருந்த ஏர் இந்தியா (போயிங் 787) வானூர்தி புறப்பட்ட சிறிது நேரத்தில் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான பெருந்துயர செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
விபத்தில் சிக்கிய பயணிகளை விரைந்து மீட்கவும், உயர் மருத்துவ சிகிச்சை அளித்து உயிர் காக்கவும் குஜராத் மாநில அரசையும், மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள இந்திய ஒன்றிய அரசு அனைத்து உதவிகளையும் விரைந்து புரிய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலைத்தெரிவித்து,
துயரில் பங்கெடுக்கின்றேன்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி