தமிழீழம் –

15.06.1984 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளினால் தகர்க்கப்பட்ட பேரினவாத சிங்கள அரசின் விமானம்.
ஜுன் 15ம் திகதி காரைநகரில் சிங்கள கடற்படை முகாமிலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள பருத்தியடைப்பு என்ற கிராமத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கடல் விமானத்தை தமிழீழ விடுதலைப்புலிகளினால் தீயிட்டு அழித்தொழிக்கப்பட்டது
விமானம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் அதிரடியாக நுழைந்த தமிழீழ விடுதலைப்புலிகள் விமானத்திற்குக் காவல் நின்றவர்களை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு தமிழின அழிப்பிற்கு காரணமாக அமைந்த சிங்கள அரசின் விமானத்திற்குத் தீவைத்தனர்.
விமானத்தின் பெற்றோல் டாங்கியில் தீப்பற்றிய போது ஏற்பட்ட பெரும் வெடிச்சத்தம் காரைநகர் கடற்படை முகாமிற்குக்கூடக் கேட்டது.