லக்னோ:
இந்தியாவில் மொத்தம் 3 இடங்களில் ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. திருவனந்தபுரம் (தும்பா), சந்திப்பூர் (ஒடிசா மாநிலம்), ஸ்ரீஹரிகோட்டா ஆகிய 3 இடங்களில் அமைந்துள்ளது.
இது மட்டுமின்றி, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து ட்ரோன் உதவியுடன் ராக்கெட் ஏவும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது முதல் முறையாக, உத்தரபிரதேசம் மாநிலம், குஷிநகரில் ராக்கெட் ஏவும் சோதனையை இஸ்ரோ நிகழ்த்தி உள்ளது.
இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானி அபிஷேக் சிங் கூறியதாவது:
த்ரஸ்ட் டெக் இந்தியா லிமிடெட் உடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த சோதனையில், 15 கிலோ எடையுள்ள ராக்கெட் 1.1 கிலோமீட்டர் உயரத்திற்கு பறந்து பாதுகாப்பாக தரையில் இறங்கியது.
வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 900 இளைஞர்களால் உருவாக்கப்பட்ட செயற்கைக் கோளை விண்ணில் ஏவி சோதிக்க உள்ளோம் என்றார்.