இஸ்ரேல்-ஈரான் மோதல் –
ஈராக்கில் ஈரான்-ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான கட்டைப் ஹெஸ் பொல்லா, பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளின் “இராணுவ நகர்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக” ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
“அமெரிக்கா போரில் தலையிட்டால், பிராந்தியம் முழுவதும் அதன் நலன்கள் மற்றும் தளங்களுக்கு எதிராக நாங்கள் எந்த தயக்கமும் இல்லாமல் செயல்படுவோம்” என்று அந்தக் குழு கூறியதாக ஈரானின் அரை-அதிகாரப்பூர்வ மெஹர் செய்தி நிறுவனம் மேற்கோளிட்டுள்ளது.
ஈரானுக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை என்றும் இஸ்ரேலுக்கு எதிராக நிற்க போதுமான திறன்கள் உள்ளன என்றும் அது மேலும் கூறியது.