
வரலாற்றில் இன்று
இந்திய – அமெரிக்க விண்வெளி வீராங்கனை, சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் அதிக காலம் வாழ்ந்த பெண் என்ற பெருமை பெற்றார் (2007). |
ஐ.பி.எம்., கம்ப்யூட்டர் நிறுவனம், நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்டது (1911) |
உத்தரகண்ட்டில் பெரும் வெள்ளம், நிலச்சரிவு காரணமாக, பெரும் அழிவு ஏற்பட்டது (2013) |
பூட்டானில், புகையிலை பயன்பாடு முழுமையாக தடை செய்யப்பட்டது (2010). |
தென்னாப்பிரிக்க இளைஞர் தினம் (1976) |
ஹவாய் குடியரசை அமெரிக்காவுடன் இணைக்கும் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது (1897) |
உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரரான ரஷ்யாவின் வலன்டீனா டெரெஷ்கோவா, வஸ்தோக் 6 விண்கலத்தில் பயணமானார் (1963) |
இந்திய விடுதலை போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸ் இறந்த தினம் (1925) |
16 ஜூன் 2025 | திங்கள் | இன்று – சுபமுகூர்த்த நாள். | |
தேதி | 02 – ஆனி – விசுவாவசு | திங்கள் |
நல்ல நேரம் | 06:30 – 07:30 கா / AM 04:30 – 05:30 மா / PM |
கௌரி நல்ல நேரம் | 09:30 – 10:30 கா / AM 07:30 – 08:30 மா / PM |
இராகு காலம் | 07.30 – 09.00 |
எமகண்டம் | 10.30 – 12.00 |
குளிகை | 01.30 – 03.00 |
சூலம் | கிழக்கு |
பரிகாரம் | தயிர் |
சந்திராஷ்டமம் | புனர்பூசம் பூசம் |
நாள் | மேல் நோக்கு நாள் |
லக்னம் | மிதுன லக்னம் இருப்பு நாழிகை 05 வினாடி 05 |
சூரிய உதயம் | 05:54 கா / AM |
ஸ்ரார்த திதி | சூன்ய |
திதி | இன்று பகல் 02:04 PM வரை பஞ்சமி பின்பு சஷ்டி |
நட்சத்திரம் | இன்று அதிகாலை 12:16 AM வரை திருவோணம் பின்பு அவிட்டம் இன்று இரவு 11:53 PM வரை, பின்பு சதயம் |
சுபகாரியம் | நகை வாங்க | ஆடை அணிய | கடை திறக்க சிறந்த நாள். |
இன்று – சுபமுகூர்த்த நாள்.
மேஷம் | வெற்றி |
ரிஷபம் | சுகம் |
மிதுனம் | அமைதி |
கடகம் | நன்மை |
சிம்மம் | நிம்மதி |
கன்னி | பீடை |
துலாம் | சிக்கல் |
விருச்சிகம் | ஆதரவு |
தனுசு | தோல்வி |
மகரம் | சாந்தம் |
கும்பம் | முயற்சி |
மீனம் | பாசம் |
இன்றைய ராசி பலன் | 16 ஜூன் 2025 | திங்கள்.
மேஷ ராசி நேயர்களே குடும்ப பொரளாதாரம் உயரும். யாருடனும் வம்பு, தும்புக்கு போக வேண்டாம். காதல் கைகூடி திருமணத்தில் முடியும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். | ரிஷப ராசி நேயர்களே சுப செய்திகளால் மனம் குளிரும். பண நெருக்கடி நாளடைவில் சீராகும். கணவன், மனைவி உறவு பலப்படும். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும். |
மிதுன ராசி நேயர்களே நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிரியமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். சொத்து விஷயத்தில் வில்லங்கம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். | கடக ராசி நேயர்களே திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும். உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும். |
சிம்ம ராசி நேயர்களே தன்னம்பிக்கை, தைரியம் அதிகாரிக்கும். தடைப்பட்டு வந்த காரியம் இனிதே நடைபெறும். புது நபர்கள் அறிமுகமாவர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும். | கன்னி ராசி நேயர்களே முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். எதிரிகள் சரணடைவர். தியானம் மன அமைதியை தரும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும். |
துலாம் ராசி நேயர்களே பெற்றோர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். மாறுபட்ட அணுகுமுறையால் எதையும் சாதிக்க முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். புது தொழில், யோகம் அமையும். | விருச்சிக ராசி நேயர்களே நாள் பட்ட பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்ய முடியும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். |
தனுசு ராசி நேயர்களே திட்டமிட்ட பயணங்களை மேற்கொள்ள முடியும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. | மகர ராசி நேயர்களே புது நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரகமாக முடியும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் வேலை பளு கூடும். |
கும்ப ராசி நேயர்களே அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். எப்போதும் இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படவும். தொழில், வியாபாரம் செழிப்படையும். | மீன ராசி நேயர்களே குடும்ப நிர்வாகத்தை சிறப்பாக வழி நடத்த முடியும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கணவன் மனைவிக்குள் பனிப்போர் ஏற்படும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். |
வார ராசி பலன் (13.06.2025 – 19.06.2025)
மேஷ ராசி நேயர்களே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வழிபட நன்மை உண்டாகும்.அசுவினி: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசி நாதனும் கேதுவும் சஞ்சரிப்பதால் செயல்களில் தடுமாற்றம், குடும்பத்தில் நிம்மதி இன்மை, பூர்வீக சொத்தில் பிரச்னை என்று ஏற்பட்டாலும் குருப்பார்வைகளால் நெருக்கடி நீங்கும். வரவு அதிகரிக்கும்.பரணி: ஜென்ம ராசிக்குள் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். புதிய பொருள் சேரும். முதலீடு லாபமாகும். தொழில் முன்னேற்றம் அடையும். தடைபட்ட வேலை நடக்கும்.கார்த்திகை 1ம் பாதம்: ஞாயிறு முதல் சூரியன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். முன்பு இருந்த நெருக்கடி நீங்கும். செல்வாக்கு உயரும். குருவின் பார்வையால் முடங்கி இருந்த தொழில் மீண்டும் லாபம் அடையும். | ரிஷப ராசி நேயர்களே அக்னீஸ்வரரை வழிபட வாழ்க்கை வளமாகும்.கார்த்திகை 2,3,4: ராசிக்குள் சஞ்சரித்து உடல், மன நிலையில் பாதிப்பை ஏற்படுத்திய சூரியனால் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தினர் ஆலோசனை உங்களைப் பாதுகாக்கும்.ரோகிணி: குருபகவனால் எண்ணம் நிறைவேறும். பண வரவு அதிகரிக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். மனநிம்மதி உண்டாகும். உடல்நிலை சீராகும். செல்வாக்கு உயரும். வெள்ளி அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களில் நிதானம் தேவை. வீண் பிரச்னை தோன்ற வாய்ப்பு இருப்பதால் உறவுகளையும் நண்பர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. வெள்ளி சனியில் நிதானமாக செயல்படுவது அவசியம்.சந்திராஷ்டமம்: 11.6.2025 இரவு 8:57 மணி – 14.6.2025 அதிகாலை 5:47 மணி |
மிதுன ராசி நேயர்களே ஸ்வேதாரண்யேஸ்வரரை வழிபட வாழ்க்கை வளமாகும்.மிருகசீரிடம் 3,4: சகாய ஸ்தானத்தில் செவ்வாய், கேது இணைவதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். எடுக்கும் வேலை வெற்றியாகும். உடல்நிலை சீராகும். பணியாளர் ஒத்துழைப்பால் வருமானம் உயரும்.திருவாதிரை: பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவால் வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் உயரும். நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். சனி, ஞாயிறில் செயல்களில் கவனம் தேவை.புனர்பூசம் 1,2,3: குருவால் சிலருக்கு திடீர் மாற்றம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். உங்கள் வேலைகளில் எச்சரிக்கை தேவை.சந்திராஷ்டமம்: 14.6.2025 அதிகாலை 5:48 மணி – 16.6.2025 மதியம் 12:03 மணி | கடக ராசி நேயர்களே திங்களூர் கைலாச நாதரை வழிபட சங்கடம் விலகும். புனர்பூசம் 4: அஷ்டம ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரித்து நெருக்கடிகளை உண்டாக்குவார். குருவினால் அது தீரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திட்டமிட்ட வேலை நடக்கும். திங்கள்கிழமை முதல் அமைதி காப்பது நல்லது.பூசம்: புதன் குரு சூரியனால் செலவு அதிகரிக்கும். ஒரு சிலர் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். திங்கள் செவ்வாயில் அனைத்திலும் பொறுமை காப்பது நனமை தரும்.ஆயில்யம்: விரய ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பதால் பண விவகாரத்தில் எச்சரிக்கை தேவை. குடும்பத்திலும் குழப்பம் நிம்மதி இல்லா நிலை ஏற்படும். வரவை விட செலவு அதிகரிக்கும். செவ்வாய் புதனில் பொறுமை காப்பது நல்லது.சந்திராஷ்டமம்: 16.6.2025 மதியம் 12:04 மணி – 18.6.2025 மாலை 4:15 மணி |
சிம்ம ராசி நேயர்களே சூரியனார் கோயில் சூரிய தேவனை வழிபட சங்கடம் விலகும்.மகம்: ராசிக்குள் கேது, செவ்வாய் சஞ்சரித்து நெருக்கடிகளை அதிகரித்தாலும், ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவிற்கு குருப்பார்வை உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். நண்பர்களால் லாபம் கூடும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். புதன் வியாழனில் விழிப்புடன் செயல்படுவது நல்லது.பூரம்: சுக்கிரன், புதன், குரு, சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதால் நினைப்பது நடக்கும். வருமானம் அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வங்கியில் எதிர்பார்த்த கடன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். உத்திரம் 1: ராசிநாதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் அரசு வழி முயற்சி வெற்றியாகும். புதிய தொழில் தொடங்குவதில் ஏற்பட்ட தடை விலகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். வேலைத்தேடுவோருக்கு கனவு நனவாகும்.சந்திராஷ்டமம்: 18.6.2025 மாலை 4:16 மணி – 20.6.2025 இரவு 7:06 மணி | கன்னி ராசி நேயர்களே லட்சுமி நாராயணரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.உத்திரம் 2,3,4: ஜீவன ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் தடைபட்ட வேலை நடக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். நினைப்பது நடக்கும். அஸ்தம்: ராகுவால் உங்கள் திறமை அதிகரிக்கும். உடல்,மனநிலை சீராகும். வழக்கு சாதகமாகும். குரு பார்வையால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பத்தாமிட புதனால் வருமானம் அதிகரிக்கும். வாய்ப்பு தேடி வரும்.சித்திரை 1,2: செவ்வாயும் கேதுவும் செலவுகளை அதிகரிப்பர். வாய்ப்பிருப்பதால் பூமி, தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்வது நல்லது. ஷேர் மார்க்கெட்டும் இக்காலத்தில் கை கொடுக்கும். சத்ருஜெய ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரிப்பதால் நினைத்ததை சாதிப்பீர்கள். |
துலாம் ராசி நேயர்களே யோக நரசிம்மரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.சித்திரை 3,4: செவ்வாய், கேதுவினால் பொருளாதார நிலை உயரும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். அரசு பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும்.சுவாதி: ஐந்தாமிட ராகு, சனிக்கு குருபார்வை உண்டாவதால் குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். புதிய வாய்ப்பு கதவைத் தட்டும். குருவால் நினைத்த வேலை நடக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.விசாகம் 1,2,3: உங்கள் நிலையை உயரும். வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும். பணவரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். | விருச்சிக ராசி நேயர்களே திருச்செந்தூர் முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.விசாகம் 4: அஷ்டம ஸ்தானத்தில் குரு சஞ்சாரம். வீண் செலவு கட்டுப்படும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சனி, ராகுவால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பண வரவு அதிகரிக்கும்.அனுஷம்: நான்காமிட சனி, ராகு நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும், குருபார்வையால் அவை விலகும். ஆரோக்கியம் சீராகும். செவ்வாய் கேதுவால் தொழில், உத்தியோகத்தில் கூடுதல் அக்கறை தேவை.கேட்டை: குரு பார்வையால் குடும்பத்தில் நிம்மதி, மனதில் மகிழ்ச்சியும், பண வரவும் உண்டாகும். உங்கள் எண்ணம் ஈடேறும். தடைபட்ட வேலை நடக்கும். செல்வாக்கு உயரும். சொத்து, வாகனம் ஆகியவற்றின் கனவு நனவாகும். |
தனுசு ராசி நேயர்களே ஆதி கேசவப்பெருமாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மூலம்: பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய் கேது சஞ்சரிப்பதால் வேலைகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வதற்கு முன் நன்றாக யோசிப்பது அவசியம். ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். இதுவரை இருந்த நெருக்கடி விலகும். பூராடம்: சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவும், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவும் உங்கள் நிலையை உயர்த்துவர். முயற்சி யாவும் வெற்றியாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். ஐந்தாமிட சுக்கிரனால் பொன் பொருள் சேரும்.உத்திராடம் 1: ஞாயிற்றுக்கிழமை முதல் சூரியன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். ராசிக்கு குருபார்வை உண்டாவதால் செல்வாக்கு உயரும். கனவு நனவாகும் வாரம் இது. | மகர ராசி நேயர்களே வைத்தீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.உத்திராடம் 2,3,4: ஞாயிற்றுக்கிழமை முதல் சூரியன் ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கு சாதகமாகும்.திருவோணம்: சனி, ராகுவிற்கு குருபார்வை உண்டாவதால் குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். தொழில் விருத்தியாகும். அஷ்டம கேதுவும் செவ்வாயும் உடல்நிலையில் சங்கடத்தை ஏற்படுத்துவர்.அவிட்டம் 1,2: அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் தடை உண்டாகும்.ஒரு சில வேலை இழுபறியாகும். ஆறாமிடச் சூரியன் புதனால் லாப நிலை ஏற்படும். எதிர்பார்த்த பணம் வரும். அரசு வழி வேலை சாதகமாகும். |
கும்ப ராசி நேயர்களே சனீச்வரனை வழிபட சங்கடம் விலகும்.அவிட்டம் 3,4: செவ்வாய், கேது ஏழாமிடத்தில் சஞ்சரிப்பதால் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது நல்லது. நண்பர்களிடம் எச்சரிக்கை அவசியம். கூட்டுத்தொழிலில் கவனம் வேண்டும். ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவால் கனவு நனவாகும்.சதயம்: குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் இருந்த தடை விலகி முன்னேற்றம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும்.பூரட்டாதி 1,2,3: குருபகவானால் உங்கள் நிலை உயரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். நினைத்ததை நடத்தி முடிக்கும் நிலை உண்டாகும். | மீன ராசி நேயர்களே ஆபத்சகாயேஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும்.பூரட்டாதி 4: குரு பார்வைகளால் உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். செல்வாக்கு வெளிப்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும்.உத்திரட்டாதி: விரய ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரித்தாலும் குரு பார்வை உங்களைப் பாதுகாக்கும். செவ்வாயும் கேதுவும் முன்னேற்றத்தை உண்டாக்குவார்கள். செல்வாக்கை அதிகரிப்பார். உடல் நிலையில் இருந்த பாதிப்பை அகற்றுவர்.ரேவதி: புதன் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவார். பண வரவை உண்டாக்குவார். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைப்பார். செவ்வாயும் கேதுவும் நன்மைகளை வழங்குவர். குரு பார்வையால் உங்கள் நிலை உயரும்.. |
ஜூன் 2025 சுபமுகூர்த்த நாட்கள்
Date | Month | Year | Day | Pirai |
05 22 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Thursday வியாழன் | Valarpirai வளர்பிறை |
06 23 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
08 25 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Sunday ஞாயிறு | Valarpirai வளர்பிறை |
16 02 | June ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Theipirai தேய்பிறை |
27 13 | June ஆனி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
ஜூன் 2025 தமிழ் திருமண தேதிகள்
Date | Month | Year | Day | Pirai |
05 22 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Thursday வியாழன் | Valarpirai வளர்பிறை |
06 23 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
08 25 | June வைகாசி | 2025 விசுவாசுவ | Sunday ஞாயிறு | Valarpirai வளர்பிறை |
16 02 | June ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Theipirai தேய்பிறை |
27 13 | June ஆனி | 2025 விசுவாசுவ | Friday வெள்ளி | Valarpirai வளர்பிறை |
பண்டிகைகள் ஜூன் 2025 |
ஜூன் 09 – Mon – வைகாசி விசாகம் |