கொழும்பு –
கொழும்பு, இரத்மலானை விமான நிலையம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றிற்கு இடையில் விமான சேவையை ஆரம்பிக்கும் திட்டத்திற்கு ( Air Craft Operation Certificate ) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ( Air Craft Operation Certificate) சான்றிதழ் இன்று திங்கட்கிழமை (16) வழங்கப்பட்டுள்ளது.
டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் இந்த விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த சான்றிதழ் விமானப் போக்குவரத்து தொடர்பான செயல்பாடுகளை மேற்கொள்ள அனுமதி வழங்குகிறது.
யாழ்ப்பாணத்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து இந்த விமான சேவை திட்டமிடப்பட்டுள்ளது.