பாரிஸ், பிரான்சு.
பாரிஸ், ஜூன் 16, 2025இல் – பிரான்சு வாழ் தமிழீழ மக்கள் சார்பாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அரசியல் பிரிவால் பிரெஞ்சு மக்களுக்கும், அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஓர் அவசர வேண்டுகோளைத் தமது COMMUNIQUÉ DE PRESSE ஊடாக விடுத்துள்ளது.
பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களின் தீவிரத்தன்மைக்கு உறுதியான பதிலை உறுதி செய்தல் வேண்டும் என்றும்,. அண்மையில் யாழ்ப்பாணம் செம்மணியில் 19 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட பாரிய புதைகுழி –
தமிழ்க் குழந்தைகளின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டமை மீண்டும் ஒருமுறை கொடுமைகளின் அளவை வெளிப்படுத்துகிறது என்பதையும்,
பல தசாப்தங்களாக மறைக்கப்பட்டுள்ளது. இந்த புதைகுழித் தளம் வளர்ந்து வரும் குழிகளின் பட்டியலில் சேர்க்கிறது என்பதையும், தமிழ்ப் பகுதிகளில். சர்வதேச மன்னிப்புச் சபையின் கூற்றுப்படி, இந்த புதிய கட்டமான அகழ்வாராய்ச்சி ஓர் உண்மையை நோக்கிய தீர்க்கமான படிநிலை என்றும் ஆனால், அது வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே தீர்வு காணப்படலாம் என்பதையும் சர்வதேசமும், ஐரோப்பிய அரசும், பிரெஞ்சு தேசமும் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறீலங்காவில் தமிழ்மக்களுக்கு தொடர்ந்தும் நடைபெறும் இன்னல்களைக் கடிதம் மூலம் தெரிவித்திருக்கின்றது.
கடிதத்தின் முழு வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23 ஆம் நாள் ஐரோப்பிய வாழ் தமிழீழ மக்களால் நடாத்தப்படும் உரிமைக்காக எழு தமிழாவில் இந்த விடயம் பெரும் பேசுபொருளாக இருக்கப்போகின்றது. இந்த கவனயீர்ப்புப் பேரணியில் அனைத்து ஐரோப்பா வாழ் மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என இதன் ஏற்பாட்டாளர்கள் தமிழ் இளையோர் அமைப்பினர் கோரிவருகின்றனர்.

