புதுடில்லி:
டில்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:
நமது நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படுவார்கள். இது போன்ற சமூகம் உருவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதனை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மன உறுதி கொண்டவர்களால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும். நமது கலாசாரத்தின் அணிகலன்களாக நமது மொழி மட்டுமே உள்ளது என நான் நம்புகிறேன்.
அந்நிய மொழிகளால் இந்திய கலாசாரம் மற்றும் வரலாற்றின் சாரத்தை கைப்பற்ற முடியாது. நமது நாட்டையும், கலாசாரத்தையும், வரலாற்றையும், மதத்தையும் புரிந்து கொள்ள எந்த அந்நிய மொழியும் போதுமானதாக இருக்காது. முழுமையடைந்த இந்தியா என்ற கொள்கையை, அரைகுறையான அந்நிய மொழி மூலம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
இந்த போர் என்பது எவ்வளவு கடினமானது என்பது எனக்கு தெரியும். ஆனால் , இதில் இந்திய சமூகம் வெற்றி பெறும். மீண்டும் ஒருமுறை சுயமரியாதையுடன், நமது சொந்த மொழிகளில் நமது நாட்டை நடத்துவோம். உலகையும் வழிநடத்துவோம். சித்தாந்தம் செய்வோம். ஆராய்ச்சியில் ஈடுபடுவோம் என்பதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. 2047 ல் இந்தியா, சர்வதேச அளவில் முதன்மையாக இருப்பதற்கு நமது மொழிகள் பெரிதும் பங்களிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.