20-06-2025 | ராய்ப்பூர்
ஜனவரி மாதம் முதல் இதுவரை 213 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி உள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சலைட்டுகளை ஒழிக்க பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜூன் 20) கான்கர் மாவட்டத்தில், நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில், பெண் நக்சலைட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவ இடத்திலிருந்து, வெடி மருந்துகள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இது குறித்து, கான்கர் மாவட்ட எஸ்.பி., கல்யாண் எலெசேலா கூறியதாவது: பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் நடத்திய இடத்திலிருந்து, பெண் நக்சலைட் உடல் மீட்கப்பட்டுள்ளது.அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். கடந்த ஜனவரி முதல் இதுவரை நக்சலைட்டுகள் 213 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.