இலங்கை – மூன்றரை கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஜயவர்தனபுர முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ராகம பொலிஸ் பிரிவின் கெசல்வத்த பகுதியில் 19.06.2025 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை நடத்திய சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரை கைதுசெய்துள்ளதுடன் 01 கிலோ 738 கிராம் நிறையுடய ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஐஸ் போதைப்பொருள் 504 கிராம் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதுடன் பயணித்த கார் ஒன்றையும் அதிரடிப்படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய ராகம பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.