யாழ்ப்பாணம் அரியாலை –
பேரினவாத சிங்கள அரசு நடத்திய தமிழின அழிப்பிற்கு எதிராக செம்மணியில் வெகுண்டெழுந்த அணையா தீபம்.
யாழ்ப்பாணம் அரியாலை – சிந்துபாத்தி மனிதப்புதைகுழி தொடர்பாக உண்மை கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனக்கோரியும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கும் வரையிலும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
குறித்த போராட்டமானது மக்கள் செயல் என்கின்ற தன்னார்வ இளையோர் அமைப்பால் இன்றிலிருந்து எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் செம்மணி வளைவுப் பகுதியில் வெகுசனப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன் சர்வதேச விசாரணையை கோரிய கையெழுத்து இடலும் நடைபெறுகிறது குறித்த போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களும் சென்று தங்களின் கடமையை நிறைவேற்றுங்கள்.

அணையா விளக்குப் போராட்டம்.
செம்மணி – (23.06.2025 – 25.06.2025)
கோரிக்கைகள்
- செம்மணி உள்ளிட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் கீழ் இயங்கும் இலங்கை பொறுப்புக் கூறல் செயற்திட்ட அதிகாரிகள் தொழில்நுட்ப ரீதியான உள்ளீட்டை வழங்கவும் கண்காணிப்பில் ஈடுபடவும் இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.
- ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46/1 தீர்மானத்துக்கமைய இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களை சேகரிப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் கீழ் இயங்கும் இலங்கை பொறுப்புக் கூறல் செயற்திட்ட அதிகாரிகளுக்கு தங்கு தடையற்ற அனுமதி இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டும்.
- மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் வலிந்து காணாமலாக்கப் பட்டவர்கள் தமது சமூகத்தின் வளங்களை பெற்று அதன் மூலம் சுதந்திரமான தொழிநுட்ப உள்ளீட்டைப் பெற்றுக் கொள்ள இலங்கை அரசாங்கம் அனுமதிக்குமாறு அழுத்தம் வழங்க வேண்டும்.
- புதைகுழி அகழ்வுப் பணி தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால் கோரப்படும் அனைத்து நிதி கோரிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என அழுத்தம் கொடுக்க வேண்டும்.
- இது வரை வெளிவந்த தகவல்கள் பிரகாரம் அனைத்து புதைகுழிகள் தொடர்பிலும் சர்வதேச கண்காணிப்புடனான அகழ்வுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.
- இலங்கையில் பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் ஐ. நா பொதுச் சபை ஊடாக ஐ. நா பாதுகாப்பு அவைக்கு விடயம் பாரப்படுத்தப்பட்டு அதனூடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை ஒன்றை சாத்தியப்படுத்துவதற்கான செயற்பாடுகளை ஐ நா மனித உரிமை ஆணையாளர் எதிர்வரும் ஐ. நா மனித உரிமை பேரவை கூட்டத்தில் முடுக்கி விட வேண்டும்.
மக்கள் செயல்
PEOPLE’S ACTION
