திருகோணமலை, 25 ஜூன் 2025 –
காலை 9.30 மணி: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இன்று திருகோணமலையில் உள்ள யுப்லி மண்டபத்திற்கு வருகை தந்தார். இந்நிகழ்வின் போது, மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் திரு ச.சிவயோகநாதன் அவர்கள் ஆணையாளரை நேரில் சந்தித்து, முக்கியமான விடயங்களை எடுத்துரைத்தார்.

திரு சிவயோகநாதன் அவர்கள் ஆணையாளர் முன் வலியுறுத்திய முக்கியமான விடயங்கள் பின்வருமாறு:
வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் நில அபகரிப்பு சம்பவங்கள்
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது அரசியல் அடக்குமுறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள்
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச விசாரணையின் அவசியம்
திட்டமிட்ட இன மாற்றமும், பாரம்பரியத்தை அழிக்கும் நடவடிக்கைகள்
பௌத்த விகாரைகளின் ஆக்கிருமிப்பு மற்றும் அவர்களால் மேற்கொள்ளப்படும் அதிகார மீறல்கள்
மேலும், மேற்கண்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு வடகிழக்கில் நடைபெற்று வரும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்தும், ஒரு தரமான கோரிக்கை மணு ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இக் காணொளிக் கூட்டம் மற்றும் ஆவண கையளிப்பு நிகழ்வு, நீண்ட காலமாக தொடரும் தமிழ் மக்கள் மீதான structural injustice-ஐ சர்வதேசம் முன் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தும் முக்கியமான கட்டமாகும்.










ஈழத்து நிலவன் | 25/06/2025