
லெப்டினன்ட் மொட்டைக் கஜன்
அழகரத்தினம் மணிவண்ணன்
கல்லடி வீதி, மட்டக்களப்பு.
வீரப்பிறப்பு: 19.06.1962
வீரச்சாவு:-27.06.1986
நிகழ்வு: மட்டக்களப்பு புலிபாய்ந்தகல்லில் எமது முகாமை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட சமரில் வீரச்சாவு
லெப். மொட்டை கஜன்

மட்டக்களப்புச் சென்றடைந்ததும் தங்களால் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளைக் களவாடிக்கொண்டு தப்பித்தவர்களைக் கண்டான். அவனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டுவந்தது. “பிரச்சினை இன்னும் தீரவில்லை . நாங்கள் ஒரு விரும்பாத சூழ்நிலையில் சந்திக்க வேண்டிவரும்” என்று சொன்னான். இயக் கக்கட்டுப்பாடு கருதி மேற்கொண்டு எந்த நடவடிக்கையிலும் அவன் ஈடுபடவில்லை .
ஏறாவூர் பொலிஸ் நிலையத் தாக்குதலின் போதும் ஒரு குழுவிற்கு தலைமை தாங்கிச் சென்றான். அத்தாக்குதல் மூலம் கிடைக்கப் பெற்ற ஆயுதங்களை அணைத்தபடியே ஆனந்தக் கூத்தாடினான். இந்த விடயத்தில் அவன் சிறுபிள்ளைதான். தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்க அவனுக்கு வேறுவழி தெரியவில்லை .
மட்டக்களப்பில் இயக்கத்தின் உணவுத் தேவையையும் பொருளாதாரத் தேவையையும் கருதி மேற்கொள்ளப்பட்ட விவசாயச் செய்கையில் கூடியளவு அக்கறை காட்டினான். இரவு பகல் ‘வித்தியாசமில்லாமல் உழவு இயந்திரத்துடன் உழைத்துக் கொண்டிருந்தான். அனாலும் போர்க்களங்கள் என்றால் அங்கு செல்வதற்கு துடியாய்த்துடித்தான்.
இறுதியில் 27-06-86 அன்று புலி பாய்ந்த கல்லில் நிகழ்ந்த இராணுவ முற்றுகை இவனை எம்மிடமிருந்து பிரித்தது. எமது முகாமை முற்றுகையிடுவதென்றால் அது இலேசான காரிய மல்ல என்பதை உணர்த்திவிட்டே மடிந்தான்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”