ராய்ப்பூர்:

சத்தீஸ்கரில் நக்சல்களை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. நாராயண்பூரின் அபுஜ்மட் வனப்பகுதியில், பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அங்கு பதுங்கியிருந்து நக்சல்கள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் நக்சலைட்டுகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.6 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு இதுவரை சத்தீஸ்கரில், நக்சலைட்டுகள் 214 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
