கெய்ரோ –
எகிப்து நாட்டின் மினொபியா மாகாணத்தில் உள்ள அர்ப் அல் சன்பாசா கிராமத்தில் 22 தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பஸ் சென்று கொண்டு இருந்தது. அஸ்மொன் என்ற பகுதியில் பஸ் சென்ற போது எதிரே வந்த லாரியுடன் மோதியது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தொழிலாளர்கள் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சோக நிகழ்வு நிகழ்ந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.