நோர்வே –
21.06.2025 சனிக்கிழமை மற்றும் 22.06.2025 ஞாயிற்றுக்கிழமை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (நோர்வே) ஒழுங்கமைப்பில் மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா 2025 சிறப்பாக நடைபெற்றது. 1990 களின் நடுப்பகுதியில் இருந்து மாவீரர்களை நினைவுகூர்ந்து இந்த விளையாட்டு விழா சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான வருடாந்திர விளையாட்டு விழாவாக நோர்வேயில் நடைபெற்று வருகிறது.

11 இற்கு மேற்பட்ட தமிழ் விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் மற்றும் தனிநபர்கள் என்று 500 இற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் தடகள விளையாட்டுகளில் கலந்து கொண்டு வெற்றிக்கோப்பைக்காக போட்டியிட்டார்கள்
இந்நிகழ்வில் விளையாட்டுச் சுடர் ஏற்றுதல் மற்றும் தமிழீழத் தேசியக் கொடியைத் தாங்கிய வண்ணம் சிறுவர்களின் அணிவகுப்பும் சிறப்பு நிகழ்வாக இடம்பெற்றது .
பார்வையாளர்கள் ,போட்டியாளர்கள் மற்றும் அனைவருக்காகவும்
பாரம்பரிய தமிழ் உணவுகளும் தமிழீழ உணவகத்தால் விற்கப்பட்டது .
விளையாட்டு விழாவை சிறப்பிக்க,
பிரதம விருந்தினராக பிற
மாநிலத்தின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு இளைய செயற்பாட்டாளராகிய திவாகர் அவர்கள் இன்றைய வருடம் கௌரவிக்கப்பட்டார் .
ஞாயிற்று கிழமை சிறப்பாக நடைபெற்ற விளையாட்டு சுடரேற்றல் ,தேசிய கோடியை தாங்கிய சிறுவர்களின் அணிவகுப்பு போன்ற சிறப்பு நிகழ்வை பார்வையிட Lillestrøm நகராட்சி மேயர் அவர்களையும் விசேட விருந்தினராக வரவழைக்கப் பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது . அவர் தனது உரையில் நோர்வே தமிழ் மக்களின் வளர்ச்சி தொடர்பாகவும் மற்றும் அவர்களின் சுயநிர்ணய உரிமை போராட்டம் நியாயமானது என்று கருத்துப்பட கருத்தையும் வெளியிட்டிருந்தார் .
கடந்த வருடங்களை விட இந்த வருடம் போட்டிகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்பட்டது .