மேட்டூர் –
கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர், தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால், நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. போதிய நீர் இருப்பு காரணமாக கடந்த 12ம் தேதி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இன்று காலை 8:00 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 119.2 கன அடியாக இருந்தது. வினாடிக்கு 68 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது. தொடர்ந்து நீர் வரத்து அதிகமாக இருந்ததால், மேட்டூர் அணை இன்று மாலை மாலை 6:00 மணிக்கு மேட்டூர் அணை நிரம்பியது.
இதனையடுத்து அணையில் இருந்து 58 ஆயிரம் கன அடி உபரி நீர் 16 கண் மதகு வழியாக வெளியேறியது. உபரி நீர் வெளியேறுவதை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் சேலம் கலெக்டர் பிருந்தா தேவி சேலம் எம்.பி., செல்வகணபதி மற்றும் நிர்வாகிகள் அனை பொறியாளர்கள் பார்வையிட்டனர்.
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி எச்சரிக்கைவிடுக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கடந்த 67 ஆண்டுகளில் ஜூன் மாதம் மேட்டூர் அணை நிரம்புவது இதுவே முதல்முறையாகும். மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது, விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.