திருச்செந்தூர் –
திருச்செந்தூர் குடமுழுக்கு நிகழ்வு தமிழில் நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி தொடுத்த வழக்கில் இன்று மதுரை உயர்நீதி மன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது (WP (MD) 17301 / 2025 ).

வழக்கை விசாரித்த மரிய கிளாட் மற்றும் சுப்ரமணியன் ஆகிய நீதியரசர்கள் கொடுக்கப்பட்ட தீர்ப்பில்…!
தமிழுக்கு சமமான அளவில், குடமுழுக்கில் பங்கு இருக்கவேண்டும் என்றும், அதை ஆணையர் கண்காணிக்க வேண்டும் என்றும் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குடமுழுக்கு நிகழ்வான யாகசாலை, கருவறை மந்திரம், கலச மந்திரம் இவைகள் அனைத்தும் தமிழில், சமஸ்கிருதத்திற்கு இணையாக பயன்படுத்த வேண்டும்.
ஏற்கனவே தீர்ப்பை பெற்ற பிறகும், அரசு இதுகுறித்து அரசாணை வெளியிடாதாது ஏன்?
ஆணையர் மற்றும் அரசு இந்த கோரிக்கைகள் குறித்து முறையான வழிகாட்டலை இந்துசமய அறநிலைய துறை மூலமாக வழங்கவேண்டும் கோயில் நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் என்று பேசியதோடு மட்டுமின்றி நீதிபதிகள்,
இந்த திருச்செந்தூர் முருகன் கோயில் விவகாரத்தில் அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறதா என ஆணையர் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
– விரிவான ஆணை நாளை வெளியாகும்.