அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையிலான கொனீபா ஆசியக் கிண்ணப் போட்டியில் இரண்டாவது தடவையாக இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றிருக்கிறது தமிழீழம்.

2023 ஆம் ஆண்டு முதல் கொனீபாவினால் நடத்தப்பட்டு வருகின்ற ஆசியக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி முதற்தடவையாக போர்த்துக்கல் நாட்டில் லிசபொன் நகரில் நடைபெற்றது.
இதில் வெற்றிபெற்றதன் மூலம் முதலாவது ஆசியக்கிண்ணத்தினை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்த தமிழீழ உதைபந்தாட்ட அணி தற்பொழுது லண்டனில் நடைபெற்று வரும் இரண்டாவது ஆசியக்கிண்ணப் போட்டியில் திபெத்தை வென்று கிழக்கு துருக்கிஸ்தானை வீழ்த்தி மீண்டும் இறுதியாட்டத்திற்கு முன்னேறியிருக்கும் நிலையில்,
இன்று நான்காம் தகதி வெள்ளிக்கிழமை பிரித்தானிய நேரம் மாலை 16.30க்கு Elmbridge Xcel Sports Hub மைதானத்தில் தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமாகி, இறுதியாட்டம் 17.30 க்கு நடைபெறவுள்ளது.
இத்தருணத்தில் எமது வீரர்களை உற்சாகப்படுத்தி மீண்டும் வெற்றியினை எமதாக்குவதற்கு லண்டன் வாழ் தமிழர்களை உரிமையோடு அழைக்கின்றோம்.
எமது தமிழீழ தேசத்தை உலக அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்த உலகின் பல பாகங்களிலிருந்தும் உதைபந்தாட்டவீரர்கள் உணர்வுடன் ஒருங்கிணைந்திருக்கும் வேளையில் நாமும் நேரடியாக மைதானத்தில் ஒன்று கூடி தமிழீழ அணி வீரர்களை உற்சாகமூட்டுவோம்!
அனைவரும் வருக
தமிழ் ஈழ கால்பந்து கழகம்
04.07.25