
வரலாற்றில் இன்று..
அல்ஜீரியா விடுதலை தினம் (1962) |
ஆர்மீனியா அரசியலமைப்பு தினம் (1995) |
சால்வேஷன் ராணுவம் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது (1865) |
சந்தி டிரான்சிஸ்டரை வில்லியம் ஷொக்லி கண்டுபிடித்தார் (1951) |
பிபிசி தன் முதல் தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பியது (1954) |
05 ஜூலை 2025 | சனி | | |
தேதி | 21 – ஆனி – விசுவாவசு | சனி |
நல்ல நேரம் | 07:45 – 08:45 கா / AM 04:45 – 05:45 மா / PM |
கௌரி நல்ல நேரம் | 10:45 – 11:45 கா / AM 09:30 – 10:30 மா / PM |
இராகு காலம் | 09.00 – 10.30 |
எமகண்டம் | 01.30 – 03.00 |
குளிகை | 06.00 – 07.30 |
சூலம் | கிழக்கு |
பரிகாரம் | தயிர் |
சந்திராஷ்டமம் | உத்திரட்டாதி ரேவதி |
நாள் | சம நோக்கு நாள் |
லக்னம் | மிதுன லக்னம் இருப்பு நாழிகை 01 வினாடி 58 |
சூரிய உதயம் | 05:58 கா / AM |
ஸ்ரார்த திதி | தசமி |
திதி | இன்று இரவு 08:18 PM வரை தசமி பின்பு ஏகாதசி |
நட்சத்திரம் | இன்று இரவு 09:32 PM வரை சுவாதி பின்பு விசாகம் |
சுபகாரியம் | ஆயுதம் பழக | யாத்திரை போக | வார்படஞ் செய்ய | சுபம் பேச சிறந்த நாள். |
இன்றைய ராசி பலன்.
மேஷம் | சுகம் |
ரிஷபம் | மகிழ்ச்சி |
மிதுனம் | லாபம் |
கடகம் | அமைதி |
சிம்மம் | புகழ் |
கன்னி | நட்பு |
துலாம் | வெற்றி |
விருச்சிகம் | உற்சாகம் |
தனுசு | சுபம் |
மகரம் | நிறைவு |
கும்பம் | கவனம் |
மீனம் | நன்மை |
இன்றைய ராசி பலன் | 05 ஜூலை 2025 | சனி.
மேஷ ராசி நேயர்களே திறமைக்குத் எற்ற வெகுமதி கிடைக்கும். தெய்வ காரியங்களுக்காக பணம் செலவாகும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். உத்யோகத்தில் வேலை பளு குறையும். | ரிஷப ராசி நேயர்களே குடும்ப சுமை அதிகரிக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். பல நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். |
மிதுன ராசி நேயர்களே பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முடியும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும். | கடக ராசி நேயர்களே குடும்பத்தில் சுப செலவுகள் வரும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும். |
சிம்ம ராசி நேயர்களே குடும்பத்தின் மேல் அதிக அக்கறைகொள்ளவும். முக்கிய வேலைகளை விட்டுக் கொடுத்து போகவும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் உங்கள கை ஓங்கும். | கன்னி ராசி நேயர்களே குடும்ப பெரியோர்களின் ஆசி கிட்டும். திட்டமிட்ட காரியம் சிறப்பாக நடக்கும். எதிரிகளை எதிர்க்கும் துணிச்சல் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும். |
துலாம் ராசி நேயர்களே குடும்பத்தில் ஆனந்தமும், மகிழ்ச்சியும் ஏற்படும். வார்த்தைகளை அளந்து பேசவும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். | விருச்சிக ராசி நேயர்களே மற்றவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து தர முடியும். உறவினர்கள் அன்பு தொல்லை இருக்கும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். தொழில், வியாபாரம் சிறக்கும். |
தனுசு ராசி நேயர்களே அந்நிய நபர்களால் நன்மைகள் உண்டாகும். எதிர்பாராத செலவு மன அமைதியைக் கெடுக்கும். அடுத்தவர்கள் மனம் வருந்தும்படி பேச வேண்டாம். தொழில், வியாபாரம் சீராக இருக்கும். | மகர ராசி நேயர்களே எதிர்பாராத இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். உறவினர்கள் பாச மழை பொலிவர். திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும். |
கும்ப ராசி நேயர்களே நம்பியவர்களுக்கு நல்லுதவி செய்ய முடியும். நட்பு வழியில் நல்லது நடக்கும். வர வேண்டிய பணத்தை போராடி பெற வேண்டியிருக்கும்.உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். | மீன ராசி நேயர்களே குடும்பத்தின் பேராதரவை பெற முடியும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும். |
வார ராசி பலன் (30-06-2025 To 06-07-2025)
மேஷ ராசி அன்பர்களே – இந்த வார ராசி பலன் படி, நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் அதிகமாகும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். புதிய முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றவும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். தடைபட்ட காரியம் நடந்து முடியும். பணவரவு திருப்தி தரும். வருமானம் சற்று குறைவாகவே இருக்கும். அதற்காக கவலைப்பட்டு மற்ற விஷயங்களில் கோட்டை விட வேண்டாம். கணவன் மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் வீட்டில் நடைபெறும். குடும்ப விஷயங்களில் பல சிக்கல்களை தீர்த்துவைக்கும் கட்டாயத்தில் உள்ளீர்கள். உத்யோக மாற்றம் தொடர்பான எந்த சிந்தனையும் வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். பரிகாரம் : துர்கையை வழிபடவும் | ரிஷப ராசி அன்பர்களே – இந்த வார பலன் படி, எங்கும், எதிலும் கவனமாக இருப்பது நல்லது. முக்கிய காரியங்களில் தடை வந்தாலும், இறுதியில் வெற்றிகரமாக முடிக்க முடியும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். குடும்பத்திற்காக நிறைய உழைக்க வேண்டியிருக்கும். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு எதிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. பண வரவு வெளியில் சொல்லும்படி இருக்கும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நண்பர்களிடம் எப்போதும் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். பயணத்தில் மிகுந்த கவனம் தேவை. குடும்ப நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டு திறமையாக செயல்படுத்த முடியும். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். தொழில், வியாபாரம் மேன்மையடையும். பரிகாரம் : கிருஷ்ணரை வணங்கி வழிபடவும் |
மிதுன ராசி அன்பர்களே – இந்த வார ராசி பலன் படி, குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். பொருளாதாரத்தில் ஏற்றமான நிலை காணப்படும். உறவுகளில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். எந்த ஒரு வேலையைச் செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. பணவரத்து குறையும். உடல் சோர்வு ஏற்படும். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். நினைத்த காரியம் எதுவானாலும் கைகூடும். மற்றவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வீட்டில் சுப நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடக்கும். கணவன் மனைவிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்னையும் இருக்காது. மனம் வருந்துபடியான விஷயம் ஏதேனும் இருந்தால் மறந்துவிடுவது நல்லது. உத்யோகத்தில் பணிவு அவசியம். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வழிபடவும் | கடக ராசி அன்பர்களே – இந்த வார பலன் படி, குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் இருக்கும். பணவரவு அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வருமானமும் குறைவாகவே இருக்கும், இருப்பினும் பெரிதாக கவலைப்பட ஒன்றும் இல்லை. கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். பண பிரச்சனை ஓரளவு தீரும். உடல் நிலையில் கவனம் தேவை. தேவையில்லாத செலவுகளில் ஈடுபட வேண்டாம். புதிய முயற்சிகள் எதையும் இப்போதைக்கு மேற்கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். புது தொழில் யோகம் உண்டு. பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும் |
சிம்ம ராசி அன்பர்களே இந்த வார பலன் படி, நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். குடும்பத்தில் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பர். புதிய நபர்களின் நட்பு உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். உடல் ஆரோக்யத்தில் சிறு சிறு சங்கடங்கள் வரலாம். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே சில கசப்பான விஷயங்கள் நடக்கும். உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுத் தரும். குடும்ப வருமானம் நல்லபடி இருக்கும். அடுத்தவரிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும். பரிகாரம் : சூரிய பகவானை தினமும் வழிபடவும் | கன்னி ராசி அன்பர்களே இந்த வார பலன் படி, நீங்கள் எதிர்பார்த்தது போலவே பொருள் வரவு அதிகரிக்கும். அடுத்த கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் சிக்கல் இருக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம். வெளி உணவுகளை கூடுமானவரை தவிர்க்கவும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் தலைமையில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பெண்கள் வகையில் சில நன்மைகள் உண்டு. எதிரிகளின் பலம் மற்றும் பலவீனத்தை நன்கு உணர முடியும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரம் சிறப்படையும். பரிகாரம் : மஹாவிஷ்ணுவை வணங்கி வழிபடவும் |
துலாம் ராசி அன்பர்களே இந்த வாரம் பலன் படி, குடும்பத்தில் வரும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். நண்பர்ககளுடன் சின்ன மனவருத்தம் உண்டாகலாம், இருப்பினும் நாளடைவில் சரியாகும். குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாக வாய்ப்புண்டு. உறவினர்களிடம் பேசும் போது கவனமாகப் பேசுவது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். கடன் பிரச்னை தீரும். சொந்த வீடு வாங்கும் நீண்ட நாள் கனவு நிறைவேற வாய்ப்புள்ளது, பொருளாதாரம் பற்றிய கவலைகள் வேண்டாம் சிறப்பாக உள்ளது. வரவு செலவு கணக்குகள் கட்டுப்பாட்டில் இருக்கும். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்க தாமதம் ஆகலாம், மனம் தளர வேண்டாம். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும். பரிகாரம் : சுக்கிர பகவானை வழிபடவும் | விருச்சிக ராசி அன்பர்களே இந்த வார ராசி பலன் படி, மனதில் உற்சாகம் பிறக்கும். தடைப்பட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன்தரும். பொருளாதார வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். சேமிக்கும் பழக்கம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்த பிரச்னையும் இருக்காது. வாகனங்களைப் பயன்படுத்தும் போது அதிக கவனம் தேவை, தேவையற்ற வேகம் கூடாது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். குடும்பத்தில் திருப்திகரமான சூழ்நிலை ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த சந்தோஷம் கிடைக்கும். வாகன யோகம் உண்டு என்பதால் புதிய வாகனம் ஒன்றை வாங்க முடியும். பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாற வேண்டிவரும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கவனம் செலுத்தவும். பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும் |
தனுசு ராசி அன்பர்களே இந்த வார பலன்படி, வாக்கு வன்மையால் காரியானுகூலம் உண்டாகும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் பல வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிரியமானவர்களிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பழைய சிக்கல் ஓரளவு தீரும். வீடு, வாகனம் ஆகியவற்றால் செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிடையே ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். அடுத்தவர் பிரச்சனையில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. முக்கிய பணிகளை செய்யும் போது ஒரு சில தடங்கல் வந்தாலும் இறுதியில் சுபமாக முடியும். உத்யோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறுகளை சமாளிக்க வேண்டிவரும். பரிகாரம் : நவக்கிரகத்தை தினமும் வழிபடவும் | மகர ராசி அன்பர்களே இந்த வார பலன்படி, குடும்பத்தில் திட்டமிடாத சிலர் செலவுகல் வரும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதிக் குறைவு உண்டாகலாம். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வாக்கு சாதுரியம் ஏற்படும். ஆன்மிக எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வீண் செலவுகளால் நிம்மதி பாதிக்கும். செலவுகளை குறைத்து சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நல்லது. வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் உபாதைகள் விரைவில் குணமாகும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். இரவு நேர வாகன பயணங்களில் கவனமாக இருக்கவும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பரிகாரம் : குரு பகவானை வழிபடவும் |
கும்ப ராசி அன்பர்களே இந்த வார ராசி பலன்படி, பல பிரபலங்கள் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். சற்றும் எதிர்பார்க்காத விஷயங்கள் நடக்கும். எதிர்ப்புகள் தானாக விலகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்ற முடியும். அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. வீண் மன சங்கடம் ஏற்படலாம். மனதில் பட்டதை எப்போதும் ஒளிவு மறைவின்றி பேசவும். உடல் நலனில் அக்கறைகொள்ளவும். கடன் தொல்லைகள் மனதை வாட்டும். முடிந்த வரை பழைய கடனை அடைத்துவிடுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். குல தெய்வ பிராத்தனையை நிறைவேற்றவும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் வேலைபளு கூடும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பரிகாரம் : ஸ்ரீ ராகவேந்திரரை வழிபடவும் | மீன ராசி அன்பர்களே இந்த வார பலன்படி, புதிதாக செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. ஆன்மீக பெரியோர்களின் ஆசி கிட்டும். அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் தேவையான பொருட்களை வாங்க முடியும். பண வரவு ஒரு சில தடங்கலுக்கு பின் கைக்கு வரும். வீண் செலவுகள் படிப்படியாக குறையும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் முற்றிலும் நீங்கும். வாங்கிய கடனை அடைத்துவிட முடியும். நெருங்கிய உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமணம் தொடர்பான விஷயங்கள் கைகூடும். குடும்ப விஷயத்துக்காக நிறைய அலைச்சல் இருக்கும், உடல் சோர்வு ஏற்படும், கவலை வேண்டாம். சுற்றி இருப்பவர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வாகனங்களைப் பயன்படுத்தும் போது கவனம் தேவை. உத்யோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். . பரிகாரம் : விநாயகரை வழிபடவும் |
06 July 2025 – Sunday | முஹர்ரம் பண்டிகை | Muharram Festival
ஜூலை 2025 சுபமுகூர்த்த நாட்கள்
Date | Month | Year | Day | Pirai |
02 18 | July ஆனி | 2025 விசுவாசுவ | Wednesday புதன் | Valarpirai வளர்பிறை |
07 23 | July ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Valarpirai வளர்பிறை |
13 29 | July ஆனி | 2025 விசுவாசுவ | Sunday ஞாயிறு | Theipirai தேய்பிறை |
14 30 | July ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Theipirai தேய்பிறை |
16 32 | July ஆனி | 2025 விசுவாசுவ | Wednesday புதன் | Theipirai தேய்பிறை |
ஜூலை 2025 தமிழ் திருமண தேதிகள்
Date | Month | Year | Day | Pirai |
02 18 | July ஆனி | 2025 விசுவாசுவ | Wednesday புதன் | Valarpirai வளர்பிறை |
07 23 | July ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Valarpirai வளர்பிறை |
13 29 | July ஆனி | 2025 விசுவாசுவ | Sunday ஞாயிறு | Theipirai தேய்பிறை |
14 30 | July ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Theipirai தேய்பிறை |
16 32 | July ஆனி | 2025 விசுவாசுவ | Wednesday புதன் | Theipirai தேய்பிறை |
பண்டிகைகள் ஜூலை 2025 |
Jul 02 – Wed – ஆனி உத்திர தரிசனம் |
Jul 28 – Mon – ஆடிப்பூரம் |
- ஜூலை 2025 விசேஷங்கள் :
ஜூலை 01 (செ) சிதம்பரம் சிவன் தேர்
ஜூலை 02 (பு) ஆனி உத்திரம்
ஜூலை 04 (வெ) விவேகானந்தர் நினைவு நாள்
ஜூலை 05 (ச) ராமநாதபுரத்தில் தேர்
ஜூலை 06 (ஞா) மொகரம்
ஜூலை 07 (தி) கண்டமாதேவி, திருக்கோளக்குடி, கானாடுகாத்தான் சிவன் தேர்
ஜூலை 08 (செ) நெல்லையப்பர் தேர்
ஜூலை 10 (வி) சாத்தூர் பெருமாள் தேர்
ஜூலை 12 (ச) திருத்தங்கல் தேர்
ஜூலை 16 (பு) தட்சிணாயண புண்ணிய காலம்
ஜூலை 20 (ஞா) ஆடி கிருத்திகை
ஜூலை 24 (வி) ஆடி அமாவாசை
ஜூலை 27 (ஞா) ராமேஸ்வரம், திருவாடானை, நயினார்கோவில் அம்மன் தேர்
ஜூலை 28 (தி) நாக சதுர்த்தி
ஜூலை 28 (தி) ஆடிப்பூரம்
ஜூலை 28 (தி) ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேர்
ஜூலை 29 (செ) கருட பஞ்சமி