| டெல்-அவிவ்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளை மாளிகை சென்றுள்ளார். இந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தங்கள் நாட்டு வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனம் தரப்பில், 18 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெற்கு காசாவில் உள்ள கான் யூனிசிற்கு சென்றவர்கள் தங்கியிருந்த கூடாரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 4 பேரும், மேலும் நடந்த மற்றொரு தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய காசாவில், ஒரு குழுவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 72 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் நாசர் மருத்துவமனையிலும் நுசைராட்டில் உள்ள அவ்தா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.