-இலங்கை-
மடவல – உல்பாத பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (08.07.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கண்டி – மாரஸ்ஸன பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
இவர் கடந்த திங்கட்கிழமை (07.07.2025) இரவு தனது இரண்டு நண்பர்களுடன் இணைந்து பூங்கா ஒன்றில் அமர்ந்திருந்த போது அங்கு நுழைந்த காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பிரதேசத்தில் தினமும் காட்டு யானைகள் சுற்றித் திரிவதாக பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.