-தமிழீழம்-

லெப்டினன்ட்
சொக்கன் (சின்னா)
கிறிஸ்ரி ராஜ்மோகன்
ஆலடிச்சந்தி, நல்லூர் வடக்கு, யாழ்ப்பாணம்.
21.07.1974 – 09.07.1992
இயக்கச்சிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு.
யாழ்ப்பாணத்தில் ஒதுக்குப் புறமான ஒரு கிராமம். அங்குதான் எங்கள் பயிற்சி முகாம் இருந்தது. ஒருநாள், மதியம் ஒருமணி இருக்கும். எமது வழமையான பயிற்சி நேரம் அது உச்சி வெயில் சூரியன் தனது முழு வெப்பக் கதிர்களையும் எங்கள் தலைகளை நோக்கிச் செலுத்துவதைப்போல இருந்தது. கீழேயோவெறும் மணல் சூரியனால் சூடேறி தன்னுள் புதையும் எங்கள் கால்களை அனலாய் எரித்தது. அந்தச் சுடுமணலில் ஓடி உருண்டு தவழ்ந்து அதிகாலையில் இருந்து தொடரும் கடும். பயிற்சி, உடலிற்கு மிருந்த வேதனையையும். களைப்பையும் கொடுத்துக் கொண்டிருந்தது.
பயிற்சிப் பொறுப்பாளர் கடுமையான பயிற்சிகளைத் தந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் படுத்து நிலையெடுப்பதற்கான உத்தரவு பிறக்கிறது. நிலம் சுடும். என நினைக்க நேரமிருக்காத மின்னல் வேகப் பயிற்சிகள். உடனேயே கீழே விழுந்து நிலையெடுத்தோம். உடலையும் அணைத்து அள்ளியெடுத்தது சுடுமணல் உடல் கொதித்தது. வேதனையில் நாங்கள் துவண்டோம்.
அருகில் சின்னா. டம்மி றைபிளை அவனது கைகள் தோளோடு அணைத்து இறுகப் பற்றியிருந்தன. கண்கள் வேட்கையோடும் உறுதியோடும். இலக்கை நோக்கியிருந்தன, மணலின் கொதிப்பு அவனைத் தாக்குவதாகத் தெரியவில்லை. முகத்தில் எதுவித சலனமுமின்றியிருந்தான், ஆனால், அவனது வாய் மட்டும் ஏதனையோ உச்சரித்துக் கொண்டிருந்தது. அன்றைய பயிற்சிகள் முடிந்து எங்களெங்கள் கூடாரங்களுக்கு நாங்கள் சென்றுவிட்டோம். மாலை நேரம். எல்லோரும் ஓய்வாகச் சிரித்துக் கதைத்து தேநீர் அருந்திக் கொண்டு மகிழந்திருந்தார்கள். சின்னாவிடம் சென்றேன்.
பயிற்சியின் போது உனக்குள்ளேயே என்னவோ சொல்லிக்கொண்டிருந்தியே மச்சான்?…. ஆரையடா திட்டிக்கொண்டிருந்தனீ….?
நான் ஒருத்தரையும் திட்லேல்லை ‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று திரும்ப திரும்ப உச்சரித்துக்கொண்டு இருந்தனான் அவன் தொடர்ந்து சொன்னான்.
தாங்கமுடியாத கஸ்டமான பயிற்சிகளைத் செய்யும் போதெல்லாம் நான் மனசுக் குள்ள அப்படிச் சொல்லிக்கொள்ளுவன். அந்நேரங்களில் களைப்பும் வேதனையும் மறைந்துபோய் விடுகின்றது. அதோட எனக்குள்ள உற்சாகமும் பிறக்கின்றது”
அவன் சொல்லி முடித்தபோது நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். பயிற்சி முகாமில் எனது மனதில் இப்படித்தான் சின்னா முதன்முதலில் இடம்பிடித்தான். இப்படித்தான் இன்னுமொருநாள். அது ஒரு நடுஇரவுநேரம் பன்னிரண்டு…ஒரு மணிக்குமேல் கடந்திருக்காது, பகல் முழுவதும் நடந்த பயிற்சிகளின் களைப்பால் எல்லோரும் ஆழிந்து தூங்கிக் கொண்டிருந்த நேரம் அது காவல்களைத் தவிர திடீரென ‘அலேட் விசில்’ எங்கள் தூக்கத்தைக் கலைக்கிறது. உடனடியாக நாம் எல்லோரும் தளத்தைச் சுற்றியிருக்கின்ற எங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள காவல் நிலைகளுக்கு விரைய வேண்டும். அதற்கான அவசரசமிக்ஞையே அது.
நாம் தங்கியிருக்கும் முகாம் எதிரியின் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய சூழ்நிலை
வந்தால், அது எந்த நேரமாக இருந்தாலும் எப்படி முகாமைப் பாதுகாக்க வேண்டும் என்ற பயிற்சிதான் அது. துடித்துப் பதைத்து எழுந்து, தலைமாட்டில் றைபிளை கைபிழைக்காமல் எடுத்துக்கொண்டு, கும்மிருட்டில் தடவித்தடவி அதே வேளை வேகமாக நகர்ந்து காவல் அரண்களுக்குச் சென்று சரியான முறையில் நிலையெடுத்துவிட்டோம்.
ஒரு மணி நேரம் கடந்திருக்கும் அரண்களிலிருந்து திரும்புவதற்கான அறிவித்தலை எமது பொறுப்பாளர் அனுப்புகிறார். எல்லாக்குழுக்களும் நிலைகளிலிருந்து வெளியேறித்தங்கள் தங்க எது கூடாரங்களுக்குத் திரும்பிவிட்டன. மீண்டும் ஆழ்ந்து தூங்கி நாங்கள் மறுநாள் காலையில் எழுத்து, பயிற்சிக்குத் தயாராகி குழுரீதியாக வரிசையில் நிற்கும்போதுதான் பார்த்தோம்.
சின்னாவின் குழுவைக் காணவில்லை. சரா அண்ணைக்கு உடனேயே விளங்கிவிட்டது. இரவு நிலையெடுக்கச் சென்ற குழு திரும்பவில்லை என்பது புரிந்துவிட்டது. அவசரமாக சின்னாவின் குழு நிலையெடுத்திருந்த திசை நோக்கிச்சென்ற சரா அண்ணனை சிரித்த முகத்தோடு பார்த்த சின்னா ஏன் அண்ணை இன்னும் ‘வித்றோ ‘விசில்’ ஊதேல்லை?” என்று கேட்டான்.
வழமையான இடத்திற்கு வெளியே தூரத்தில் அந்தக் குழு நிலை எடுத்திருந்தமை யால், திரும்புவதற்கான அழைப்பு அவர்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது. அதனால் முதல்நாள் பெய்த மழையினால் சேறாகிப்போய்க் கிடந்த நிலத்தில் உடலை உறைய வைக்கின்ற பனிக்குளிரில் நுளம்புகளின் ஓயாத குத்தல்களுக்கும் நடுவில் அவன் தனது குழுவை விழிப்பான கண்காணிப்பில் ஈடுபடுத்தினான்.
எவரையும் தூங்கிப்போக விடாமல் பார்த்து. அக்கடமையில் கண்ணாக விழித்து, திரும்புவதற்கான உத்தரவு வரும்வரை அவன் இரவிரவாகக் காத்திருந்தான். குழுவின் மனவுறுதியையும் அவளது வழிகாட்டலையும் பயிற்சி ஆசிரியர் மெச்சினார். அத்துடன் அன்றைய பகல் பயிற்சியில் இருந்து சின்னாவின் குழு விடுவிக்கப்பட்டு ஓய்வு கொடுக்கப்பட்டது. உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிகின்ற கட்டுப்பாடு மிக்க தன்மையை எதுவரினும் கடமையை இம்மியும் பிசகாமல் செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டைக் கொண்டவனாகச் சின்னாவை பயிற்சி முகாம் வளர்த்து எடுத்தது.
பயிற்சி முகாம் உண்மையில் அது ஒரு பட்டறைதான். அங்குதான் தேசத்தின் புதல்வர்கள் போராளிகளாகப்புடம் போடப்படுகின்றார்கள். வாழ்வுசாதாரண சமூக நிலையில் இருந்து தம்மைச் சுதந்திரப் போராட்டத்திற்குள்நுழைக்கின்ற ஒவ்வொருவரும் இங்கேதான்,முழுமையான விடுதலை வீரர்களாகவனைந்தெடுக்கப்படுகிறார்கள் பயிற்சிப் பாசறை என்பது சாதாரணமாக எல்லோரும் நினைப்பதைப் போல, ஆயுதங்களைக் கையாள்வதுடன் இராணுவப் பயிற்சிக்ளைப் பெறும் உடற்பயிற்சிக் சுல்லூரியாக மட்டும் குறுகிவிடாது.
புலிகளின் பயிற்சிப் பாசறைகள் வித்தியாசமானவை. அதிசிறந்த படைத்துறைசார் பயிற்சிகளுடனும் அறிவூயூட்டல்களுடனும் அங்கு உள்ளங்கள் தூய்மையாக்கப்படுகின்றன; தெளிவூட்டப்படுகின்றன; உறுதியேற்றப்படுகின்றன. அங்கே செல்கின்றவர்கள் வெளியேறும்போது அசாதாரண மனிதர்களாகவே வருவார்கள்.
இயல்பாகவே தேசப்பற்றும். தியாக உணர்வும் கொண்டவர்களே தேசத்திற்காகத் தம்மை முழமையாக அர்ப்பணிக்க முன்வருகின்றார்கள். அவர்களது போராட்ட வாழ்வு பயிற்சிப் பாசறையில்தான் ஆரம்பிக்கின்றது. அங்கே அவர்களது உணர்வுகள் உர மேறுகின்றன; மனம் உருக்குப் போன்ற உறுதி பெறுகிறது.
எதற்கும் மேலாக தாயகத்தை நேசிக்கின்ற மேன்மையை தாயகத்திற்காகச் சாகவும் தயாரான சிந்தையை அடுத்தவர்களை வைக்கும் கொண்ட ஆச்சரியப்படவைக்கும் போராற்றல் கொண்ட விந்தையை துணை இடர் வரினும் குலைந்து தளராத உறுதித் துணிவை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற சீரிய இயல்புகள் வழுவாத தன்மையை “ஒழுக்கம், நேர்மை, பண்பு, முயற்சி, அன்பு, ஆருமை என உயர்ந்த வாழ்வு நெறிகளை பயிற்சி முகாம் அவர்களுக்கு வழங்குகின்றது.
போராளிகளின் பயிற்சிக்கால வாழ்வும், அக்காலத்தில் அவர்கள் பெறுகின்ற ஓய்விலாத கடுமையான பயிற்சிகளும் அனுபவங்களும்தான் போர்க்களத்திலும், மக்கள் மத்தியிலும் புலிவீரர்களுக்குத் தனிப்பெரும் கௌரவத்தையும் மதிப்பையும் பெற்றுக்கொடுக்கின்றன. இந்தப் பயிற்சிகள் மட்டுமல்ல, அங்கே நடைபெறும் வகுப்புகள் சிறந்த கல்வி அறிவை ஊட்டுவதுடன், பரந்த உலகப் பார்வை கொண்ட பொது அறிவையும் வழங்குகின்றன.
பயிற்சி முகாம் பொறுப்பாளர் சரா அண்ணன், பொன்னம்மானைப் பற்றிச் சொல்லுவார். பயிற்சி தரும் பொறுப்பாளர்கள். செல்வராஜா மாஸ்டரைப் பற்றிச் சொல் வார்கள். இவர்கள் எவ்வளவு திறம்பட பயிற்சி முகாம்களை நடாத்தி புதிய போராளிகளை உருவாக்கினார்கள் என்பதைப் பற்றிச் சொல்லுவார்கள். போராளிகளைச் சிறந்த போர் வீரர்களாக மட்டுகளாகமன்றி, சிறந்த தேசபக்தர் உருவாக்கினார்கள் என்பதை பற்றிச் சொல்லுவார்கள்.
சின்னா பேருக்கேற்றால் போல் சின்னவனாகத்தான் இருந்தான். கிறிஸ்ரி – கமல ராணி தம்பதிகளுக்கு இவனுடன் சேர்த்து நான்கு குழந்தைகள், ஒரு அண்ணனையும், இரண்டு பெண்களையும் உடன் பிறப்புகளாகப் பெற்ற இவனது இயற்பெயர் ராஜ் மோகன். யாழ்ப்பாணத்தில் நல்லூர் இவர்களது ஊர். ரோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் ஆரம்பக் கல்வி பெற்ற சின்னா, பின்னர் பரந்தன் மகாவித்தியாலத்தில் கல்வி கற்றான். படிப்பில் சிறந்து விளங்கிய சின்னா போராட்டப் பணிகனிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டான்
வெளியிலிருந்து போராட்டத்திற்கு உதவும் உற்ற தேசப்பக்தனாக விளங்கிய சின்னா, 1991 இன் நடுப்பகுதியில் இயக்கத்தோடு தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டான். சின்னாவின் முதற்களம் ஆனையிறவுப் பெருஞ்சமர், அதில் அவன் பின்கள வேலைகளிலேயே ஈடுபடுத்தப்பட்டான். சண்டை அரண் அமைத்தல், காயமடைந்த வீரர்களை அப்புறப்படுத்தல், ஆயுதங்களையும் வெடிப்பொருட்களையும் விநியோகித்தல் வேலைகளில் ஈடுபட்டகுழுவுடன், அவன் அங்கு நின்றான்.
ஆனையிறவுச் சமர் முடிந்தகையோடு சிங்களப் படை,மணலாற்றுக் காட்டின் மீது ஒப்பரேசன் மின்னல்’ என்ற பெயரில் பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமரில் சின்னாவும் பங்கேற்றான்.
தமிழீழத்தின் இதயத்தைப் பாதுகாத்த அந்தப் பெருஞ்சமரின் போது தனது திறமையை வெளிக்காட்டி ஆற்றல் மிகுந்தசண்டைக் காரனாகக் களமாடிய சின்னா கையில் காயமடைந்து களத்திலிருந்து அகற்றப்படுகிறான்.
சின்னா! மென்மையான சுபாம் கொண்டவன். எல்லோரோடும் மிகுந்த அன்புடன் பழகு கின்றவன். எந்த நேரமும் புன்னகை தவழும் முகத்தோடு எங்களுக்குள் சுழன்று திரிந்தவன். ஓய்வாக இருக்கும் நேரங்களில் பகிடிக்கதைகள் சொல்லி எங்களைச் சிரிக்க வைத்து மகிழ்வித்துக் கொண்டு இருந்தவன். இன்று அவன் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டான். 1992 ஆம் ஆண்டின் நடுப்பகுதி சிங்கள முப்படைகளும் இணந்து முப்படைகளின் தளபதிகளும் வழி நடாத்த, போர் விமானங்கள், பீரங்கிக் கப்பல்கள், கனரக ஆயுகங்கள். டாங்கிகள் சகிதம், பாரிய இராணுவ நகர்வு ஒன்றைக்
கட்டைக்காட்டில் இருந்து ஆரம்பித்தனர். குடாநாட்டிற்கான பொதுமக்களின் போக்குவரத்துப் பாதையைத் தடைசெய்து, இராணுவவேலி போட்டு, முற்றுகையை இறுக்குவது அவர்களின் நோக்கமாக இருந்தது. அந்தக் கடுமையான சண்டையின்போது அங்குலம் அங்குலமாக நகர்ந்த படையினர், 09-07-1992 அன்று இயக்கச்சிவரை வந்திருந்தனர். அன்று இப்பகுதியில் இருந்த எமது நிலைகளை உடைத்துக்கொண்டு நகர எதிரி சண்டையிட்டுக் கொண்டிருந்தான். எதிரியின் கவசவாகனங்களும் எறிகைணகளும் அவனுக்குப் பாதை அமைத்துக்கொடுத்துக் கொண்டிருந்தன. சின்னாவோடு நாங்கள் நின்றிருந்த பகுதி மீது எதிரி ஒரு மித்துத் தாக்கினான். குண்டுகளைக் கொட்டின. ரவைகள் ஆயிரக்கணக்கில் எம்மைக் கடந்து சென்றன. எதிரியின் பீரங்கித் தாக்குதல் கடுமையானதாக இருந்தது. தொடர்ந்து வந்துகொண்டிருந்த எறிகணைகளில் ஒன்று எங்களுக்கு மிக அருகாக விழுந்து வெடித்தபோது, அந்தத் துயரம் நிகழ்ந்தது சின்னாவை நாங்கள் இழந்துவிட்டோம்; சின்னாவோடு சீனுவும், தமிழ்மாறனும் கூட,
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”